பிரதமர் வேட்பாளர்களுக்கு விதிக்கப்பட்டுள்ள புதிய நிபந்தனை: திங்கட்கிழமை நிறைவடையும் வேட்புமனு தாக்கல்
44 நாட்களிலேயே பிரதமர் பதவியில் இருந்து ராஜினாமா செய்தார் லிஸ் டிரஸ்.
புதிய வேட்பாளர்களுக்கு குறைந்தது 100 எம்.பி-களின் ஆதரவு பரிந்துரைகள் தேவை.
பிரித்தானிய பிரதமர் தேர்தலில் வேட்பாளராக போட்டியிடும் போட்டியாளர்களுக்கு குறைந்தது 100 டோரி எம்.பி-களின் பரிந்துரைகளாவது தேவைப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிரித்தானியாவில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு புதிய பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்ட லிஸ் டிரஸ், பதவியிலிருந்த 44 நாட்களிலேயே ராஜினாமா செய்வதாக அறிவித்துள்ளார்.
பிரதமர் லிஸ் டிரஸ் அரசாங்கத்தின் மோசமான பொருளாதார திட்டங்கள் மூலமாக சந்தையில் ஏற்பட்ட நெருக்கடி காரணமாக எழுந்த சர்ச்சை மற்றும் எதிர்ப்புகளால் அவர் பதவி விலகும் நிலைக்கு தள்ளப்பட்டார்.
Liz Truss has resigned as prime minister and a leadership election to decide the UK's next prime minister will be completed by Friday next week.
— Sky News (@SkyNews) October 21, 2022
So, how will choosing the new Tory leader work?
? https://t.co/QLV8315gxN pic.twitter.com/lhuEKM3mS1
இதையடுத்து பிரித்தானியாவின் புதிய பிரதமரை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் அடுத்த வாரத்திற்குள் நடத்தி முடிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் அடுத்த பிரதமருக்கான தேர்தலில் போட்டியிடும் போட்டியாளர்களுக்கு குறைந்தது 100 டோரி எம்.பி-களின் ஆதரவு இருக்க வேண்டும் என தலைமைத் தேர்தல் அதிகாரி சர் கிரஹாம் பிராடி (Sir Graham Brady) தெரிவித்துள்ளார்.
இது பல வேட்பாளர் போட்டியில் இருந்து குறைக்கப்பட்டு அதிகப்பட்சமாக மூன்று வேட்பாளர்கள் வரை போட்டியிட அனுமதிக்கும் என தெரிவித்துள்ளார்.
அத்துடன் வேட்புமனு தாக்கல் இன்று முதல் திறக்கப்பட்டு, திங்கட்கிழமை மதியம் 2 மணியுடன் முடிவடையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் இறுதி இரண்டு வேட்பாளர்கள் செய்தி ஒளிபரப்பாளர்களுடன் ஏற்பாடு செய்யப்பட்ட ஹல்டிங் நிகழ்வில் பங்கேற்பார்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கூடுதல் செய்திகளுக்கு: பிரித்தானிய பிரதமர் போட்டிக்கான வேட்பாளர்கள் யார் யார்? வரலாறு மற்றும் முழு விவரம்
கன்சர்வேடிவ் கட்சியின் தலைவர் ஜேக் பெர்ரி (Jake Berry) பேசுகையில், இரண்டு வேட்பாளர்கள் போட்டியிடும் பட்சத்தில் உறுப்பினர்களுக்கான ஆன்லைன் வாக்களிப்பு இருக்கும் என தெரிவித்தார்.