இரட்டைக் குழந்தைகளை பொலிசாரிடம் கொண்டு சென்று உதவி கேட்ட தாய்! அர்ஜென்டினாவில் வினோத சம்பவம்
அர்ஜென்டினாவில் தனக்கு பிறந்த ஒரே மாதிரியான இரட்டைக் குழந்தைகளை அடையாளம் காண முடியாமல் காவல்துறையிடம் குழந்தைகளின் தாய் உதவி கேட்ட சம்பவம் அரங்கேறியுள்ளது.
ஐடென்டிகல் ட்வின்ஸ்
இரட்டைக் குழந்தைகள் என்றாலே, அதிலும் குறிப்பாக ஐடென்டிகல் ட்வின்ஸ் என்று சொல்லக்கூடிய ஒரே மாதியான இரட்டைக் குழந்தைகள் என்பதைக் கேட்க பொதுவாக அனைவருக்கும் ஆர்வமாக இருக்கும்.
ஒரே மாதியான இரட்டைக் குழந்தைகளை அடையாளம் காண முடியாது என்பதால், ஆசிரியர்கள் மற்றும் நண்பர்கள் என வெளியுலகில் பல தவறுகள் நடக்க வாய்ப்புள்ளது. பொதுவாக, பெற்றோர்கள் மற்றும் வீட்டு உறுப்பினர்கள் இரட்டையர்களை விரைவாக வேறுபடுத்தி அறிந்துகொள்வதை காணலாம்.
Image: Newsflash
அடையாளம் காண முடியாமல் காவல்துறையை நாடிய தாய்
ஆனால் அர்ஜென்டினாவை பூர்வீகமாகக் கொண்ட சோஃபியா ரோட்ரிக்ஸ் (Sofia Rodriguez) என்ற பெண்ணின் விவகாரம் இதையெல்லாம் விட சற்று வித்தியாசமானது. சோபி எவ்வளவு முயன்றும் தனக்குப் பிறந்த இரட்டைக் குழந்தைகளை அடையாளம் காண முடியாமல் போனதால், கடைசியில் காவல்துறையின் உதவியை நாட வேண்டியிருந்தது.
இதை சோஃபியா சமூக வலைதளங்களில் பகிர்ந்துள்ளார், அந்த ஆண்டின் சிறந்த தாய் விருதை வெல்ல அவரது செயல்கள் தகுதியானவை என்று நகைச்சுவையாகக் குறிப்பிட்டார்.
அவர்கள் பிறந்த சில நாட்களுக்குப் பிறகு, சோஃபியாவால் தனது குழந்தைகளை அடையாளம் காண முடியவில்லை. கடைசியில் வேறு வழியில்லாத நிலையில் குழந்தைகளுடன் காவல் துறையை நாடியுள்ளனர். சோஃபி குழந்தைகளை அடையாளம் காண அவர்களின் கைரேகைகளை சேகரிக்க விரும்பினார்.
Image: Newsflash
தோற்றத்தில் ஒரே மாதிரி
சோஃபியா சமூக ஊடகங்களில் தனது இரட்டை குழந்தைகளின் படங்களையும் பகிர்ந்துள்ளார். ஆனால் படத்தில் குழந்தைகள் கொஞ்சம் வித்தியாசமாக இருப்பதாக சோஃபியே தெளிவுபடுத்துகிறார். அவர்கள் இரு திசைகளை நோக்கி படுத்திருப்பதால் வித்தியாசம் தெரிகிறது என்றும், குழந்தைகள் படுக்கையிலும் தோற்றத்திலும் ஒரே மாதிரியாக இருப்பதாகவும் சோஃபி கூறுகிறார். சோஃபியின் ட்வீட்டை 15 மில்லியனுக்கும் அதிகமானோர் பார்த்துள்ளனர்.
ஆனால், குழந்தைகளின் பிஞ்சு விரல்களிலிருந்து ரேகை சரியாக பதிவுசெய்யமுடியாததால், பொலிஸ் அதிகாரிகளாலும் குழந்தைகளை அடையாளம் காண முடியவில்லை என்று சோஃபி மற்றொரு ட்வீட்டில் தெளிவுபடுத்தியுள்ளார்.
தனது குழந்தைகளுக்கு தடுப்பூசி போடும்வேளையில் இப்படியொரு சிக்கலில் சோஃபியா சிக்கியுள்ளார்.
I couldn’t tell my identical twins apart — so I took them to get fingerprinted https://t.co/LT8LB1CHKv pic.twitter.com/6yeiOxo75f
— New York Post (@nypost) March 8, 2023
பெற்றோர்கள் யோசனை
இதே போன்று இரட்டைக் குழந்தைகளை அடையாளம் காண முடியாமல் கவலையில் இருக்கும் பெற்றோர்கள் பலரும் இந்தப் பதிவிற்கு பதிலளித்துள்ளனர்.
இருவரின் காலிலும் வெவ்வேறு வண்ண நெயில் பாலிஷ் போடுபவர்கள், குழந்தைகளை அடையாளம் காண காதில் வெவ்வேறு வண்ண காதணிகள் அணிந்தவர்கள் அனைவரும் இந்தக் குழுவில் அடங்குவர்.