இறைதூதரை அவமதித்ததால் 22 வயது மாணவருக்கு மரண தண்டனை!
பாகிஸ்தானில் இறைத்தூதரை அவமதிக்கும் வகையிலான புகைப்படங்கள், வீடியோக்களை வாட்ஸ் அப்பில் பகிர்ந்த மாணவருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
22 வயது மாணவர்
2022ஆம் ஆண்டு பாகிஸ்தான் நாட்டில் 22 வயது கல்லூரி மாணவர் ஒருவர், இஸ்லாமிய மதக்கடவுளின் இறைதூதர் குறித்து அவதூறு கருத்துகள் இடம்பெற்ற புகைப்படங்கள் மற்றும் வீடியோவை வாட்ஸ்அப்பில் பகிர்ந்துள்ளார்.
அதனை மற்றொரு 17 வயது சிறுவனும் பகிர்ந்ததால் இருவர் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கு தொடர்பான விசாரணை பஞ்சாப் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.
மரண தண்டனை
இந்த நிலையில், குறித்த 22 வயது மாணவருக்கு, 17 வயது சிறுவனும் குற்றவாளிகள் என நீதிமன்றம் உறுதிப்படுத்தியது.

பொதுமக்களுக்கு விலக்கு... சாலைகள் மூடப்பட்டு அபராதம் விதிப்பு: ஐக்கிய அமீரகத்தில் விடுக்கப்பட்ட எச்சரிக்கை
அத்துடன் முதலில் பகிர்ந்த 22 வயது மாணவருக்கு மரண தண்டனையும், 17 வயது சிறுவனுக்கு ஆயுள் தண்டனையும் விதித்து தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.
பாகிஸ்தானில் இஸ்லாமிய மதக்கடவுள் குறித்தும், இறைதூதர் குறித்தும் அவதூறு கருத்துக்கள் தெரிவித்தாலோ அல்லது அவமதித்தல் அல்லது மத நிந்தனையில் ஈடுபட்டாலோ மரண தண்டனை விதிக்கும் சட்டம் அமுலில் உள்ளது குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |