சோதனைச் சாவடி நோக்கி வந்த கார்..வெடித்துச் சிதறியதில் 12 ராணுவ வீரர்கள் மரணம்
பாகிஸ்தானில் தற்கொலைப்படை வெடிகுண்டு தாக்குதலில் 12 ராணுவ வீரர்கள் பலியாகினர்.
பயங்கரவாத தாக்குதல்கள்
பாகிஸ்தானின் வடமேற்கு பகுதியில் பலுசிஸ்தான் மற்றும் கைபர் பக்டுங்க்வா மாகாணங்களில் ஓர் ஆண்டுக்கும் மேலாக பயங்கரவாத தாக்குதல்கள் அரங்கேறி வருகின்றன.
இந்த தாக்குதல்கள் காவல்துறை, ராணுவ வாகனங்களை குறி வைத்து நடத்தப்படுகின்றன.
இந்த நிலையில் பொதுப்பகுதியான மாலிகேலில் உள்ள கூட்டு சோதனைச் சாவடியில் கார் ஒன்று வேகமாக வந்து மோதியுள்ளது. குறித்த கார் வெடித்ததில் 12 பாகிஸ்தான் ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டனர்.
பயங்கரவாதிகள் பலி
தற்கொலைப் படை வெடிகுண்டு நிரப்பப்பட்ட வாகனம் அது என பின்னர் தெரிய வந்துள்ளது. இதனையடுத்து நடத்தப்பட்ட துப்பாக்கி சண்டையில் 6 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டதாக பாகிஸ்தான் ராணுவம் தெரிவித்துள்ளது.
மேலும், இதில் காயமடைந்தவர்கள் உள்ளூர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் PTI செய்திக்குறிப்பில் கூறியுள்ளது.
ஹபீஸ் குல் பகதூர் குழு என அழைக்கப்படும் பாகிஸ்தான் தலிபானின் பிரிந்து சென்ற பிரிவினர் இந்த தாக்குதலுக்கு பொறுப்பேற்றுள்ளதாக AP தெரிவித்துள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |