காரில் ஏறிய மூத்த ரஷ்ய அதிகாரியை: குண்டு வைத்து தீர்த்துக் கட்டிய எதிர்பாளர்கள்!
ரஷ்ய ஆக்கிரமிக்கப்பாளர்களால் நியமிக்கப்பட்ட கெர்சன் பகுதி அதிகாரி டிமிட்ரி சாவ்லுசென்கோவை காரில் வெடிக்குண்டு வைத்து கொலைசெய்து விட்டதாக ரஷ்யாவின் செய்தி நிறுவனம் தகவல் தெரிவித்துள்ளது.
உக்ரைன் ரஷ்யா இடையிலான போர் தாக்குதலில் முதல் வாரமே கெர்சன் நகரம் முழுவவதுமாக ரஷ்ய படை வீரர்களால் ஆக்கிரமிக்கப்பட்டது, ரஷ்ய ஆக்கிரமிப்பை அங்குள்ள மக்கள் சில வாரங்கள் எதிர்த்து போராட்டம் நடத்தி வந்த நிலையில், அவற்றையும் ரஷ்ய படைகள் தற்போது முழுவதுமாக கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவந்துவிட்டனர்.
இருப்பினும் அங்கு ரஷ்ய படைகளால் நியமிக்கப்பட்ட அதிகாரிகளுக்கு எதிரான பல்வேறு எதிர்ப்பு நடவடிக்கையில் அப்பகுதி மக்கள் மறைமுகமாக ஈடுபட்டு வருவதாக உறுதிப்படுத்த முடியாத தகவல்கள் வெளியாகி வந்தன.
Dmitriy Savluchenko, one of the traitors in the occupied #Kherson got eliminated this morning. Traitor’s life is short these days in #Ukraine.
— olexander scherba?? (@olex_scherba) June 24, 2022
“They will greet us with flowers”, huh?#StandWithUkraine #ArmUkraineNow pic.twitter.com/OOjhmJJO2u
இந்தநிலையில், உக்ரைனின் தெற்குப் பகுதி நகரமான கெர்சனில் ரஷ்யாவில் நியமிக்கப்பட்ட அதிகாரி டிமிட்ரி சாவ்லுசென்கோவை(Dmitriy Savluchenko) குண்டு வைத்து கொலை செய்யப்பட்டு இருப்பதாக ரஷ்ய செய்தி நிறுவனம் தகவல் தெரிவித்துள்ளது.
காரில் ஏறியதும் அதில் வைக்கப்பட்ட குண்டு வெடித்து ரஷ்யாவால் நியமிக்கப்பட்ட அந்த மூத்த அதிகாரி உயிரிழந்தாக ரஷ்யாவின் RIA செய்தி அறிக்கைகள் தகவல் தெரிவித்துள்ளன.
மேலும் இதுத் தொடர்பாக ரஷ்யாவின் TASS செய்தி நிறுவனம் வெளியிட்ட தகவலில், குண்டுவெடிப்பில் இரண்டு கார்கள் எரிந்தாகவும், அங்கிருந்த நான்கு மாடி வீட்டின் ஜன்னல்கள் உடைந்து இருப்பதாகவும் தெரிவித்துள்ளது.
கூடுதல் செய்திகளுக்கு: ரஷ்யாவிற்கு எதிராக...நவீன கூட்டணியை உருவாக்குகிறது ஐரோப்பா மற்றும் நோட்டோ
அத்துடன் முதல்நிலை அறிக்கையின் படி, ரஷ்யாவால் நியமிக்கப்பட்ட மூத்த அதிகாரி இறந்துவிட்டதாகவும், வெடிக்குண்டு அவரது காரில் பதுக்கி வைக்கப்பட்டு இருந்தாகவும் Kherson பிராந்திய நிர்வாகத்தின் பிரதிநிதி Interfaxயிடம் தெரிவித்துள்ளார்.