ரஷ்யாவிற்கு எதிராக...நவீன கூட்டணியை உருவாக்குகிறது ஐரோப்பா மற்றும் நோட்டோ
ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் நோட்டோ ஆகியவை ரஷ்யாவிற்கு எதிரான போரை நடத்துவதற்காக, கூட்டணி ஒன்றை உருவாக்கி வருவது போல் தெரிகிறது என ரஷ்ய வெளியுறவு அமைச்சர் செர்ஜி லாவ்ரோவ் தெரிவித்தார்.
மேற்கத்திய ராணுவ கூட்டமைபான நோட்டோவில் இணைவதற்கான ஸ்வீடன் மற்றும் பின்லாந்து ஆகியவற்றின் முயற்சிகள் மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தில் உக்ரைன் மற்றும் மால்டோவா நாடுகளுக்கான வேட்பாளர்கள் அந்தஸ்து வழங்குவது தொடர்பான ஐரோப்பிய ஒன்றியத்தின் முடிவு ஆகியவை ரஷ்யாவின் போர் நடவடிக்கையை தொடர்ந்து அடுத்து அடுத்து மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இந்தநிலையில், ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் நேட்டோ ஆகியவை சேர்ந்து, ரஷ்ய கூட்டமைப்புடனான போருக்கு நவீன கூட்டணி ஒன்றை உருவாக்கி வருவதாக ஷ்ய வெளியுறவு அமைச்சர் செர்ஜி லாவ்ரோவ் தெரிவித்துள்ளார்.
Russian Foreign Minister Sergei Lavrov said that "it seems that the European Union and NATO are assembling a modern coalition for war with Russia."
— ТРУХА⚡️English (@TpyxaNews) June 24, 2022
He made such a statement during a visit to Azerbaijan. pic.twitter.com/mvt3I9f3mZ
அஜர்பைஜான் கூட்டாளருடன் செய்தியாளர்களை சந்தித்த செர்ஜி லாவ்ரோவ், ஐரோப்பிய ஒன்றியத்தின் நடத்தைகள் யதார்த்தமான பார்வை கொண்டு பார்த்து வருவதாகவும், அவர்களின் உண்மையான நடவடிக்கைகளை தொடர்ந்து பின்பற்றி வருவதாகவும் எனத் தெரிவித்துள்ளார்.
கூடுதல் செய்திகளுக்கு: உக்ரைனில் வீடுகளை தூள் தூளாக்கிய ரஷ்ய வீரர்: எதிர்கொள்ளவிருக்கும் தண்டனை
மேலும் தற்போது நிலவிவரும் ”ரஸ்ஸோபோபிக்" சூழ்நிலை மறைந்துவிடும் என ரஷ்யா சந்தேகிக்கிறது அல்லது எதிர்காலத்தில் எளிதாகிவிடும் என கருத்துவதாக தெரிவித்துள்ளார்.