கொலம்பியாவில் நிகழ்ந்த பயங்கர கார் குண்டுவெடிப்பு: 23 பேர் வரை படுகாயம்
Car Bomb Rocks Colombian City, 23 people injured: கொலம்பியாவில் நிகழ்ந்த பயங்கர கார் குண்டுவெடிப்பு விபத்தில் 23 பேர் வரை காயமடைந்துள்ளனர்.
கார் வெடித்து விபத்து
திங்கட்கிழமை இரவு மத்திய கொலம்பியாவின் வில்லவிசென்சியோ (Villavicencio) நகரில் நிகழந்த பயங்கர கார் குண்டுவெடிப்பு சம்பவத்தில் குறைந்தது 23 பேர் காயமடைந்துள்ளனர்.
மாகாண அரசின் தலைமையகத்திற்கு நேர் எதிரே உள்ளூர் நேரப்படி இரவு 9.30 மணியளவில் இந்த குண்டுவெடிப்பு சம்பவமானது நிகழ்ந்துள்ளது.
இந்த குண்டுவெடிப்பு சம்பவத்தால் அருகில் உள்ள கட்டிடங்கள் கடுமையான பாதிப்பை சந்தித்துள்ளன.
இந்த திடீர் குண்டுவெடிப்பு சம்பவத்தில் உயிரிழப்புகள் எதுவும் இதுவரை பதிவாகவில்லை என்று கொலம்பிய அதிபர் அபெலார்டோ டி லா எஸ்ப்ரியெல்லா (Abelardo de la Espriella) தெரிவித்துள்ளார்.

AFP செய்தி நிறுவனத்தின் தகவல்படி, இந்த குண்டுவெடிப்பால் நகரின் மையப்பகுதியில் உள்ள பல இடங்களில் மின் துண்டிப்பு ஏற்பட்டு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், சாலைகளில் சேதமடைந்த வாகனங்கள் சிதறிக்கிடப்பதாகவும், இதனால் உள்ளூர் கடைகளின் முகப்புகள் சேதமடைந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.