ரஷ்ய அரசு அதிகாரிகள் பயணித்த கார் வெடித்துச் சிதறல்: திடுக் வீடியோ
ரஷ்ய அரசு அதிகாரிகள் மற்றும் ராணுவ வீரர்கள் பயணித்த கார் ஒன்று வெடித்துச் சிதறும் திடுக்கிடவைக்கும் காட்சி ஒன்று வெளியாகியுள்ளது.
பயங்கர சத்தத்துடன் வெடித்த கார்
ரஷ்ய ஆக்கிரமிப்பு நகரமான Oleshky என்னுமிடத்தில் இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. உக்ரைன் ஊடகம் ஒன்று, இந்த சம்பவத்தின் பின்னணியில் உக்ரைன் பாதுகாப்பு அமைப்பு உள்ளதாக தெரிவித்துள்ளது.
இந்த சம்பவத்தில், காரில் பயணித்த ரஷ்ய அரசு அதிகாரி ஒருவர் சம்பவ இடத்திலேயே பலியாகியுள்ளார். மற்றொருவர் பலத்த காயத்துடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அந்த காருக்கு முன் பயணித்த வாகனத்திலிருந்த ரஷ்ய ராணுவ வீரர்கள் மூவரும் காயமடைந்துள்ளதாக அந்த ஊடகம் தெரிவித்துள்ளது.
திடுக் வீடியோ
ட்விட்டர் அல்லது எக்ஸில் வெளியிடப்பட்டுள்ள வீடியோ ஒன்றில், அந்தக் கார் வேகமாக செல்வதையும், பயங்கர சத்தத்துடன் வெடித்துச் சிதறுவதையும் காணலாம். அது வெடிக்கும் சத்தம் திடுக்கிடவைப்பதாக அமைந்துள்ளது.
В Олешках на Херсонщині підірвали авто з російськими ФСБшниками та військовими - джерела "Української правди" в СБУ pic.twitter.com/2bOFZ4de2X
— Українська правда ✌️ (@ukrpravda_news) September 7, 2023
குறிவைக்கப்பட்ட அந்த ரஷ்ய அதிகாரிகள், உக்ரைன் குடிமக்களை கடத்துவதற்காகவும், சித்திரவதை செய்வதற்காகவும் அவ்வப்போது Oleshky நகருக்கு வருவதுண்டு என்கிறது அந்த ஊடகம்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |