பிரபல நாட்டில் பயங்கரம்! காரால் மோதி 5 பேரை துடி துடிக்க கொன்ற மர்ம நபர்: என்ன காரணம்?
சீனாவில் மர்ம நபர் ஒருவன் காரால் மோதி 5 பேரை துடி துடிக்க கொன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சனிக்கிழமை Dalian நகரிலே இக்கொடூர சம்பவம் நடந்துள்ளது. மக்கள் கூட்டமாக சாலையை கடக்கும் போது திடீரென கருப்பு நிற கார் ஒன்று பயங்கர வேகத்தில் மோதிவிட்டு, சம்பவயிடத்திலிருந்து தப்பிச்சென்றுள்ளது.
கார் மோதியதில் 4 பேர் சம்பவயிடத்திலேயே உயிரிழந்துள்ளனர், படுகாயமடைந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர்களில் ஒருவரும் உயிரிழந்தார்.
காயமடைந்த மேலும் 5 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக Dalian நகர அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.
மக்கள் மீது காரை மோதிய LIU என்ற கார் ஓட்டுநரை பொலிசார் கைது செய்துள்ளனர்.
சம்பவத்தின் போது LIU மதுபோதையில் இல்லை என தெரியவந்துள்ளது.
எனினும், ஏதற்காக LIU மக்கள் மீது காரை மோதிக்சென்றார் என்பது குறித்து தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருவதாக பொலிஸ் அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.