தனக்கு பாதுகாப்பு வழங்குவது தொடர்பில் இளவரசர் ஹரி தொடர்ந்த வழக்கில் கிடைத்துள்ள ஏமாற்றம்
இளவரசர் ஹரியும் அவரது மனைவியான மேகனும், ராஜ குடும்ப பொறுப்புகளிலிருந்து விலகிக்கொண்டதைத் தொடர்ந்து, அவர்களுக்கு அளிக்கப்பட்டுவந்த பொலிஸ் பதுகாப்பு விலக்கிக்கொள்ளப்பட்டது.
தற்போது, அது தொடர்பில் ஹரி தொடர்ந்த வழக்கு ஒன்றில் அவருக்கு தோல்வி ஏற்பட்டுள்ளது.
என்ன வழக்கு?
இளவரசர் ஹரி ராஜ குடும்ப பொறுப்புகளிலிருந்து விலகிக்கொண்டதைத் தொடர்ந்து, வழக்கமாக மூத்த ராஜ குடும்ப உறுப்பினர்களுக்கு வழங்கப்படும் பொலிஸ் பாதுகாப்பு விலக்கிக்கொள்ளப்பட்டது.
Credit:- NBC News
ஆனால், தான் அமெரிக்காவிலிருந்து பிரித்தானியா வரும்போது, தனது குடும்பத்துக்கு பாதுகாப்பு தேவை என கோரிய ஹரி, பொலிசாருக்கு தான் அதற்காக ஊதியம் வழங்கத் தயாராக இருப்பதாகவும், அதனால் தனக்கு அவர்கள் பாதுகாப்பு வழங்கவேண்டும் என்றும் கோரியிருந்தார்.
வழக்கு தோல்வி
ஆனால், ராஜ குடும்ப உறுப்பினர்கள் முதலானவர்களுக்கு பாதுகாப்பு வழங்கு பொலிசாருக்கு பொறுப்பான அமைப்பான Executive Committee for the Protection of Royalty and Public Figures (Ravec committee), அப்படி பணம் பெற்றுக்கொண்டு தனி நபர்களுக்கு பொலிஸ் பாதுகாப்புக் கொடுக்கமுடியாது என கூறிவிட்டது.
Credit:- Irish Mirror
அதை எதிர்த்துத்தான் ஹரி வழக்குத் தொடர்ந்திருந்தார். கமிட்டியின் முடிவை மீளாய்வு செய்யுமாறு ஹரியில் சட்டத்தரணிகள் கோரியிருந்தனர். ஆனால், மீளாய்வுக்கு நீதிமன்றம் அனுமதி அளிக்க மறுத்துவிட்டது.
அத்துடன், பணம் கொடுத்து பொலிசாரை பணக்காரர்கள் தங்கள் பாதுகாப்புக்காக விலைக்கு வாங்க முடியாது என்னும் உள்துறை அலுவகத்தின் வாதத்தையும் நீதிமன்றம் ஏற்றுக்கொண்டதுடன், ஹரியின் வழக்கும் தோல்வியில் முடிந்துவிட்டது.
Credit:- Fox News