சீனாவில் கோவிட் காரணமாக கொன்று குவிக்கப்படும் செல்லப்பிராணிகள்! வெளியான வீடியோ ஆதாரம்
சீனாவில் கோவிட் தொற்று உறுதியான உரிமையாளர்களின் செல்லப்பிராணிகள் கொல்லப்படுவதாக செய்திகள் வெளியாகியுள்ள நிலையில், சாக்குப்பைகளில் பூனைகள் மற்றும் நாய்கள் அடைக்கப்பட்டு சாலை ஓரங்களில் வீசப்பட்டுள்ள வீடியோ ஆதாரம் ஒன்று வெளியாகியுள்ளது.
உலகின் மிகக் கடுமையான கொரோனா ஊரடங்கு விதிகளை சீன அதிகாரிகள் தொடர்ந்து செயல்படுத்தி வரும் நிலையில், இந்த திகிலூட்டும் வீடியோக்கள் வெளியாகியுள்ளன.
இந்த வீடியோவில், சாலையின் ஓரத்தில் பெரிய பெரிய குப்பைப் பைகளுக்குள் பூனைகளும் நாய்களும் அடைக்கப்பட்டுள்ளன. சற்று தளர்வாக உள்ள பைகளில் இருக்கும் சில பூனைகள் பைகளுக்குள் இருந்தவாறு சுற்றி வருகின்றன.
இந்த வீடியோ ட்விட்டரில் Enes FREEDOM என்ற ஐடியில் பதிவேற்றப்பட்டுள்ளது. அந்த டீவீட்டில், "ஷாங்காயில் 26 மில்லியன் மக்கள் ஊரடங்கு விதிக்கப்பட்டுள்ளனர்.
26 million people in lockdown in Shanghai.
— Enes FREEDOM (@EnesFreedom) April 16, 2022
People are committing suicide from their balconies and Pets from people getting tested positive for #Covid are being collected to be killed and slaughtered in #Shanghai / #China
This is pure evil!
pic.twitter.com/9spkdvi4WS
சீனா, ஷாங்காயில் மக்கள் தங்கள் பால்கனியில் இருந்து தற்கொலை செய்து கொள்கிறார்கள் மற்றும் கோவிட் தோற்றால் பாதிக்கப்படும் நபர்களிடமிருந்து செல்லப்பிராணிகள் படுகொலை செய்யபப்டுவதற்காக சேகரிக்கப்படுகிறது. இது கொடூரத்தின் உச்சம்" என்று பதிவிடப்பட்டுள்ளது.