வீட்டில் இறந்து கிடந்த 21 வயது டிக்டோக் பிரபலம்! வெளியான அதிர்ச்சி காரணம்
ஹோண்டுராஸ் டிக்டோக் பிரபலம் ஜெனிஃபர் நிக்கோல் ரிவாஸின் மரணம் குறித்த காரணம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
டிக்டோக் பிரபலம்
மத்திய அமெரிக்க நாடான ஹோண்டுராஸின் தலைநகர் டெகுசிகல்பாவில் தொலைக்காட்சி தொகுப்பாளரும், டிக்டாக் பிரபலமுமான ஜெனிஃபர் நிக்கோல் ரிவாஸ் தனது வீட்டில் இறந்து கிடந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
21 வயதில் அவர் இறந்துகிடந்தது அவரது ரசிகர்களுக்கு பேரதிர்ச்சியை ஏற்படுத்தியது. ரசிகர்கள் பலரும் சமூக ஊடகங்களில் அவருக்கு அஞ்சலி செலுத்தினர்.
ஜெனிஃபர் நிக்கோல் வலிப்பு நோயால் இறந்திருக்கலாம் என்று அதிகாரிகள் சந்தேகிக்கின்றனர்.
அவருக்கு வலிப்பு நோய் இருந்ததாகவும், அந்த நிலைக்கு மருந்து உட்கொண்டதாகவும் HCH டிஜிட்டல் தொலைக்காட்சி தெரிவித்துள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |