40 இந்தியர்களின் உயிரை பறித்த குவைத் தீ விபத்துக்கு அலட்சியம் தான் காரணமா? வெளியான அதிர்ச்சி தகவல்
40 இந்தியர்கள் உட்பட 49 உயிர்களை பறித்த குவைத் தீ விபத்துக்கான காரணம் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
குவைத் தீ விபத்து
குவைத் நாட்டின் தெற்கு அகமதி மாகாணத்தில் மங்கஃப் நகரத்தில் அமைந்துள்ள அடுக்குமாடி குடியிருப்பில் கடந்த ஜூன் 12 -ம் திகதி அதிகாலையில் பயங்கரமான தீ விபத்து ஏற்பட்டது.
இந்த விபத்தில் 40 இந்தியர்கள் உட்பட 49 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். குவைத் நாட்டவருக்கு சேர்ந்த இந்த குடியிருப்பில், வெளிநாட்டை சேர்ந்தவர்கள் அதிகம் தங்கியுள்ளனர். மொத்தம் இதில் 6 மாடிகள் உள்ளன.
இந்த விபத்துக்கான காரணம் குறித்து விசாரிக்கும் போது அடுக்குமாடி குடியிருப்பில் கட்டுமான விதிமீறல்கள் ஏற்பட்டதாக தெரியவந்துள்ளது. இது தொடர்பாக அந்நாட்டு அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
என்ன காரணம்?
எகிப்து நாட்டு காவலாளி தங்கியிருந்த பகுதியில் வைக்கப்பட்டிருந்த சமையல் எரிவாயு சிலிண்டர் வெடித்தது தான் விபத்துக்கான காரணம் என்று முதற்கட்ட தகவல் வெளியாகியுள்ளது.
கட்டிடத்தின் கீழ்தளத்தில் காவலாளி தங்கிய நிலையில், மற்ற பகுதிகளுக்கும் தீ வேகமாக பரவியுள்ளது. இந்த அடுக்குமாடி குடியிருப்பில் சுமார் 195 பேர் தங்கி இருந்துள்ளனர். அதில் 150 - மேற்பட்டோர் இந்தியர்கள் என்று கூறப்படுகிறது.
தீ விபத்து ஏற்பட்ட போது 92 பேர் பத்திரமாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இரவு பணிக்கு 20 பேர் சென்றுள்ளனர்.
குறிப்பாக தீ விபத்து அதிகாலையில் ஏற்பட்டதால் குடியிருப்பில் உள்ளவர்கள் தூங்கி கொண்டு இருந்துள்ளனர். இது தான் உயிரிழப்பு அதிகமாக காரணம் எனவும் சொல்லப்படுகிறது.
மேலும், தீயினால் ஏற்பட்ட புகையை சுவாசித்த காரணத்தால் மூச்சு திணறல் ஏற்பட்டு சிலர் உயிரிழந்துள்ளனர். இன்னும் சிலர் மாடியில் இருந்து தப்பிக்க முயன்றி கீழே குதித்து உயிரிழந்துள்ளனர்.
இதையடுத்து, விபத்துக்கு காரணமானவர்கள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என குவைத்தின் எமிர் ஷேக் அல்-சபா தெரிவித்துள்ளார்.
இந்த விபத்தில், கேரளா, தமிழகம் மற்றும் வட இந்தியாவை சேர்ந்தவர்கள் உயிரிழந்துள்ளதாக குவைத் தடயவியல் துறை தகவல் தெரிவித்துள்ளது.
இந்த தீ விபத்திற்கு என்பிடிசி நிறுவனம் மற்றும் அடுக்குமாடி குடியிருப்பு உரிமையாளரின் பேராசை தான் காரணம் என பாதுகாப்பு துறை அமைச்சரும், துணை பிரதமருமான ஷேக் ஃபகத் அல் யூசுப் அல் சபா தெரிவித்துள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |