1000 மீற்றர் பள்ளத்தில் சிக்கிய நபர்... ஐரோப்பா முழுவதும் இருந்து திரண்ட மீட்பவர் குழு
துருக்கியில் குகை ஒன்றில் சுமார் 3,000 அடி பள்ளத்தில் சிக்கிக்கொண்ட அமெரிக்க ஆய்வாளரை மீட்க ஐரோப்பா முழுவதிலும் இருந்து சிறப்பு படையினர் திரண்டுள்ளனர்.
சுமார் 1000 மீற்றர் ஆழத்தில்
தெற்கு துருக்கியின் தாரஸ் மலைப்பகுதியில் அமைந்துள்ள Morca குகையிலேயே 40 வயதான Mark Dickey என்ற ஆய்வாளர் சிக்கிக்கொண்டுள்ளார். சுமார் 1000 மீற்றர் ஆழத்தில் திடீரென்று அவர் நோய்வாய்ப்பட வயிற்று இரத்தப்போக்கு காரணமாக அவதிப்பட்டுள்ளார்.
@AP
அவரது இந்த நிலைமைக்கு காரணம் என்ன என்பது உறுதி செய்யப்படவில்லை. இதனையடுத்து ஐரோப்பிய நாடுகள் பலவற்றில் இருந்து, குறிப்பாக பல்கேரியா, குரோஷியா, ஹங்கேரி, இத்தாலி, போலந்து மற்றும் துருக்கியில் இருந்து மீட்புக் குழுக்கள் ஒன்றாக நடவடிக்கை முன்னெடுத்துள்ளனர்.
3 வாரங்கள் வரையில்
நிலைமைகளைப் பொறுத்து மீட்பு நடவடிக்கைக்கு நாட்கள் அல்லது வாரங்கள் கூட ஆகலாம் என்று நிபுணர்கள் கூறுகின்றனர். 1,276 மீற்றர் ஆழம் கொண்ட மோர்கா குகையில் சுமார் 1,000 மீற்றர் ஆழத்தில் மார்க் டிக்கி சிக்கிக்கொண்டுள்ளார்.
@TCF
தற்போது மருத்துவர்கள், அவசர மருத்துவ உதவிக்குழுவினர் உட்பட 170 பேர்கள் கொண்ட குழு மீட்பு நடவடிக்கையை முன்னெடுத்து வருகிறது. அவரை குகையில் இருந்து மீட்க இன்னும் 2 அல்லது 3 வாரங்கள் வரையில் தேவைப்படலாம் என நிபுணர்கள் தரப்பு தெரிவிக்கின்றனர்.
@TCF
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |