குகைக்குகள் கொத்து கொத்தாக கிடைத்த மனித எலும்புகள்! வெளியான நடுங்க வைக்கும் தகவல்
சவூதி அரேபியாவில் குகை முழுவதும் குவிந்து கிடந்த எலும்பு கூடுகளை ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
சவுதி அரேபியாவில் உள்ள உம்மு ஜிர்சான் பகுதியில் சுமார் 1.5 கிலோ மீட்டர் அளவில் உள்ள குகை முழுவதும் எலும்பு கூடுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இந்த குகை பல ஆண்டுகளுக்கு முன்பு ஏற்பட்ட எரிமலை வெடிப்பின் போது வெளியேறிய லாவா குழம்பால் ஆனது என்று கூறுகின்றனர். இங்கு சுமார் 1,917 மேற்பட்ட எலும்பு கூடுகள் குவிந்து கிடந்துள்ளது.
இதனை பரிசோதனை செய்த ஆராய்ச்சியாளர்கள் ஒட்டகங்கள், கழுதை, புலிகள் போன்ற விலங்குகளின் எலும்பு கூடு மட்டும் இல்லாமல் ஒரு சில மனித எலும்புகள் மற்றும் மண்டை ஓட்டின் எச்சங்களும் உள்ளதாக கூறியுள்ளனர். அவை சுமார் 439 முதல் 6,839 ஆண்டுகள் பழமையானது ஆகும்.
உம்மு ஜிர்சான் பகுதியில் கண்டுபிடிக்கப்பட்ட இந்த எலும்பு குவியல்கள் பண்டைய அரேபியாவின் காலத்திற்கு சொந்தமானது என்று தெரிவித்துள்ளனர்.
இது போன்ற சம்பவம் 1942ஆம் ஆண்டு செக் குடியரசில் சர்ப்ஸ்கோ என்ற பகுதியில் நடந்தது குறிப்பிடத்தக்கது. மேலும் இவை எப்படி இங்கு வந்தது குறித்து அதிகாரிகள் ஆராய்ச்சி செய்து வருகின்றனர்.