தேவாலயத்திற்கு வெளியே நடத்தப்பட்ட தற்கொலை தாக்குதலின் சிசிடிவி காட்சி வெளியானது! உடல் பாகங்கள் சிதறி கிடப்பதாக தகவல்
இந்தோனேசியாவில் தேவாலயத்திற்கு வெளியே நடத்தப்பட்ட தற்கொலை தாக்குதலின் சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளது.
இந்திதோனேசியாவின் Makassar நகரில் உள்ள தேவாலயத்திற்கு வெளியே நடத்தப்பட்ட தாக்குதலில் குறைந்தது 10 பேர் காயமடைந்துள்ளனர்.
ஈஸ்டர் பண்டிகையின் முதல் நாளான இன்று தேவாலயத்தில் பிரார்த்தனை முடிந்து வெளியே வந்துக்கொண்டிருந்த மக்களை குறிவைத்து ஒருவர் அல்லது இரண்டு தற்கொலை தாக்குதல்தாரிகள் தாக்குதல் நடத்தியதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.
சம்பவயிடத்தில் உடல் பாகங்கள் சிதறி கிடப்பதாகவும், அது யாருடையது என அடையாளம் காணும் பணிகள் நடைபெற்று வருவதாக கூறினர்.
தேவாலயத்தின் பாதுகாப்புக் காவலர்கள் சந்தேகத்திற்குரிய தாக்குதல்தாரியை தடுத்து நிறுத்தியதாக தேவாலயத்தின் பாதிரியார் Wilhemus Tulak கூறினார்.
Breaking News‼️
— demoCRAZYabal2 (@demokrasiAbal2) March 28, 2021
Detik2 saat terjadi Ledakan di Gereja Katedral Makassar, Sulawesi Selatan
Tdk ada agama yg membenarkan perilaku spti ini, ini biadad?
Kalau kejadian di gereja stigma teroris akan cepat disematkan ke pelakunya, beda jika Masjid yg kena, orang gila jadi sasaran pic.twitter.com/kFEkRPgLxi
தாக்குதல் நடத்தியவர், மோட்டார் சைக்கிளில் வந்து தேவாலயத்திற்குள் நுழைய முயன்றார் எனவும், பாதிக்கப்பட்டவர்களில் சிலருக்கு பலத்த காயம் ஏற்பட்டது என்று பாதிரியார் கூறினார்.
தேவாலயத்தின் நுழைவாயிலால் குண்டுவெடிப்பு நடந்தது அப்பகுதியில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கமெராக்களில் பதிவாகியுள்ளது. அதில் குண்டுவெடித்து சாலையின் நடுவில் தீ, புகை மற்றும் சிதைந்த பொருட்கள் தெறித்து விழும் காட்சிகளை காட்டுகிறது.