சொத்தில் பாதியை கேட்ட மனைவிக்கு அதிர்ச்சி கொடுத்த கால்பந்து வீரர்! புத்திசாலி என பாராட்டும் ஆளுமைகள்
மொராக்கோ கால்பந்து வீரர் அச்ராஃப் ஹக்கிமியின் தாயார் பெயரில் சொத்துக்கள் உள்ளதால், விவாகரத்து கோரிய மனைவி ஏமாற்றமடைந்த நிலையில், விளையாட்டு ஆளுமைகள் வீரரை பாராட்டி வருகின்றனர்.
அச்ராஃப் ஹக்கிமி
பாரிஸ் செயிண்ட் ஜேர்மைன் கிளப் அணியின் நட்சத்திர வீரரான ஹக்கிமி, தனது மனைவிக்கு விவாகரத்து வழக்கில் அதிர்ச்சி கொடுத்த விடயம் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.
அவரது மனைவி ஹிபா அபூக் சொத்தில் பாதியை ஜீவனாம்சமாக கேட்ட நிலையில், ஹக்கிமியின் தாயார் பெயரில் தான் சொத்துக்கள் இருந்தது தெரிய வந்தது. இதனால் ஹிபா மிகுந்த ஏமாற்றமடைந்தார்.
அறிக்கைகளின்படி, கடந்த 13ஆம் திகதி ஹிபாவின் கணவரின் பெயரில் எதுவும் இல்லாததால், அவரது கோரிக்கையை நிறைவேற்ற முடியாது என்று நீதிபதிகளால் வெளிப்படுத்தப்பட்டபோது ஹிபா அதிர்ச்சியடைந்தார்.
பிரபல ஆளுமைகள் பாராட்டு
இந்த நிலையில், தனது சொத்துக்கள் மற்றும் செல்வங்கள் அனைத்தையும் புத்திசாலித்தனமாக ஹக்கிமி தனது பெயரில் வைத்துள்ளார் என அமெரிக்க பிரபலம் ஆன்ட்ரூ டேட் மற்றும் மார்ஷியல் ஆர்ட்ஸ் கலைஞர் இஸ்ரேல் அடெஸன்யா ஆகியோர் பாராட்டியுள்ளனர்.
(Supplied: Andrew Tate)
சூழ்நிலை தனக்கு எதிராக மாறுவதற்கு முன்பு ஹக்கிமி புத்திசாலித்தனமான நகர்வை எடுத்ததாக அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
Israel Adesanya / UFC
இதற்கிடையில் இந்த விவாகரத்து செய்தியின் மூலம் ஹக்கிமி மற்றும் ஹிபா தம்பதி வலைத்தளங்களில் வைரலாகியுள்ளனர்.