பாத்ரூமில் கதறி அழுத விராட் கோலி; என்ன நடந்தது? போட்டுடைத்த சஹால்
18 ஆண்டுகளாக ஐபிஎல் தொடர் நடந்து வரும் நிலையில், 2025 ஐபிஎல் தொடரில் ஆர்சிபி அணி முதல்முறையாக கோப்பையை வென்றது.
முதல் ஐபிஎல் தொடரில் இருந்து தற்போது வரை அதே அணியில் விளையாடி வரும் ஒரே வீரரான விராட் கோலி, கோப்பையை வென்றதும் ஆனந்த கண்ணீர் வடித்தார்.
களத்தில் ஆக்ரோஷமாக இருக்கும் விராட் கோலி, கண் கலங்கியது இணையத்தில் வைரலானது.
கதறி அழுத கோலி
அதே போல், 2019 ஆம் ஆண்டில் விராட் கோலி கதறி அழுத சம்பவம் ஒன்றை சக வீரர் யுஸ்வேந்திர சாஹல் பகிர்ந்துள்ளார்.
2019 ஆம் ஆண்டு உலகக்கோப்பை இங்கிலாந்தில் நடைபெற்றது. இதில், இந்திய அணி, 19 ஓட்டங்கள் வித்தியாசத்தில் நியூசிலாந்திடம் தோல்வியை தழுவியது ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இது குறித்து பேசிய சாஹல், "நான் கடைசி வீரராக ஆட்டமிழந்து திரும்பிய போது, தோல்வியை தாங்கிக் கொள்ள முடியாமல், விராட் கோலி பாத்ரூமில் கதறி அழுது கொண்டிருந்ததை நான் பார்த்தேன். கிட்டத்தட்ட அணியில் இருந்த அனைவரும் அழுதனர்.
இதுவே தோனி விளையாடிய கடைசி ஒருநாள் போட்டி ஆகும். அந்த போட்டியை நினைக்கும் போதெல்லாம் இன்னும் நன்றாக பந்து வீசியிருக்கலாம் என தோன்றும்.
ஏனென்றால், 10 ஓவர்களில் ஒரு விக்கெட் மட்டுமே எடுத்து 63 ரன்களை விட்டுக் கொடுத்தேன்.10 முதல் 15 ஓட்டங்களை குறைவாக கொடுத்திருந்தால், அது அணிக்கு உதவிகரமாக இருந்திருக்கும்" என கூறினார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |