சாம்பியன்ஸ் டிராபி 2025: அனுஷ்கா சர்மாவின் முத்துக்கள் பதித்த டெனிம் ஆடை! விலை தெரியுமா?
சாம்பியன்ஸ் டிராபி 2025 தொடரின் இறுதிப்போட்டியில் பிரபல நடிகை மற்றும் விராட் கோலியின் மனைவியுமான அனுஷ்கா சர்மாவின் தோற்றம் அனைவரைவும் ஈர்த்துள்ளது.
அசத்தலான அனுஷ்கா சர்மாவின் தோற்றம்
இந்தியாவின் சாம்பியன்ஸ் டிராபி 2025 வெற்றிக்குப் பிறகு, அனுஷ்கா சர்மா தனது கணவர் விராட் கோலியுடன் கொண்டாட்டத்தில் கலந்துகொண்டார். அப்போது அவர் அணிந்திருந்த முத்து வேலைப்பாடு கொண்ட டெனிம் உடை இணையத்தில் வைரலாகியுள்ளது.
மேஜ் பாரிஸ் டெனிம் செட்: அனுஷ்கா சர்மா, மேஜ் பாரிஸ்(Maje Paris) நிறுவனத்தின் லைட் ப்ளூ டெனிம் செட்டை(blue denim set) அணிந்திருந்தார். இதில், முத்து வேலைப்பாடு கொண்ட அகலமான "mom" ஷார்ட்ஸ்(shorts) மற்றும் அதற்கு பொருத்தமான முழுக்கை பட்டன்-டவுன் சட்டை ஆகியவை இடம்பெற்று இருந்தது.
அனுஷ்கா சர்மாவின் கொண்டாட்ட தோற்றத்திற்கு ஒரு நேர்த்தியான தோற்றத்தை அளித்த இந்த ஷார்ட்ஸ் சுமார் ரூ. 20,500 மதிப்புள்ளது ஆகும்.
இதற்கு பொருத்தமாக அனுஷ்கா அணிந்திருந்த சட்டை சுமார் ரூ. 25,600 மதிப்புள்ளது, இவை முத்து வேலைப்பாடுகளின் பிரதிபலிப்பாக இருந்தது.
அனுஷ்கா சர்மா, ஆடம்பரமான நகைகளைத் தவிர்த்து, சில மென்மையான ஸ்டாக்டு வளையல்களை மட்டும் அணிந்திருந்தார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |