தமிழகத்தில் இன்று முதல் 4 நாட்களுக்கு மிதமான மழை பெய்யக்கூடும்- வானிலை மையம்
தமிழகத்தில் இன்று முதல் 23ஆம் திகதி வரை ஓரிரு இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
வானிலை மையம் கூறுகையில்..,
தமிழ்நாட்டில் பருவமழை கடந்த ஜனவரி 15ஆம் திகதியுடன் முடிவுக்கு வந்தது.
இதனையடுத்து அதிகாலை நேரங்களில் பனிப்பொழிவு தீவிரமாக இருந்தது. சில நாட்களில், காலை 10 மணி வரை பனி மூட்டம் தமிழகத்தின் பல பகுதிகளில் இருந்து வந்தது.
இதனை தொடர்ந்து தற்போது வெயில் தீவிரமடைந்திருக்கிறது. பிப்ரவரி மாதம் இறுதி தொடங்கி தற்போதுவரை வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கிறது.
இந்நிலையில் அடுத்த இரண்டு நாட்களுக்கும் வெப்பநிலை மேலும் அதிகரிக்கும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
அதேபோல மார்ச் 18ஆம் திகதி தென் தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் கூறியுள்ளது.
இந்நிலையில் வானிலை அறிக்கையின் படி இன்று முதல் 23ஆம் திகதி வரை தமிழகத்தில் ஓரிரு இடங்களில் மிதமான மழைக்கு பெய்ய வாய்ப்புள்ளது.
மேலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |