வங்கக்கடலில் உருவாகி வலுவிழந்த மிதிலி புயல்: தமிழகத்தில் இன்று 12 மாவட்டங்களில் மழை
தமிழகத்தில் 12 மாவட்டங்களில் இன்று லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
வங்கக் கடலில் நிலவி வந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் மிதிலி புயலாக வலுப்பெற்றது.
இந்த புயல் மோங்கா கொபுரா கடற்கரை இடையே கரையை கடக்கும் என்றும், கரையைக் கடக்கும் போது மணிக்கு 60- 70km வேகத்தில் காற்று வீசும் என்றும் வானிலை ஆய்வு மையம் எச்சரித்து இருந்தது.
இந்நிலையில், நேற்று பிற்பகலே கரையை கடக்க தொடங்கிய மிதிலி புயல் 20km வேகத்தில் நகர்ந்து வங்கதேசம் அருகே இரவில் கரையை கடந்தது.
கரையைக் கடந்த மிதிலி புயல் வடக்கு வடகிழக்கு திசையில் நகர்ந்து, திரிபுரா மற்றும் வங்கதேசம் இடையே ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவிழந்தது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், தமிழகத்தில் 12 மாவட்டங்களில் லேசான மழை மற்றும் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
அதன்படி அரியலூர், திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை, சிவகங்கை, திருவள்ளூர், காஞ்சிபுரம், சென்னை, செங்கல்பட்டு ஆகிய 9 மாவட்டங்களில் லேசான மழைக்கு வாய்ப்புள்ளது.
மேலும் கடலூர், மயிலாடுதுறை, நாகை ஆகிய மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |