செஸ் சாம்பியன் குகேஷ்க்கு வாழ்த்து தெரிவித்து சர்ச்சையை ஏற்படுத்திய சந்திரபாபு நாயுடு
உலக செஸ் சாம்பியன்ஷிப் பட்டத்தை கைப்பற்றிய தமிழகத்தின் குகேஷ்க்கு ஆந்திர மாநில முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு வாழ்த்து தெரிவித்துள்ளார்.
சந்திரபாபு நாயுடு வாழ்த்து
உலக செஸ் சாம்பியன்ஷிப்பில் சீனாவின் லிரெனை வீழ்த்தி தமிழக வீரர் குகேஷ் சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியுள்ளார். இவர், தனது 18 வயதிலே உலகின் 18-வது சாம்பியனாக சாதனை பட்டியலில் இணைந்துள்ளார்.
இந்திய அளவில் உலக செஸ் சாம்பியன் பட்டத்தை வென்ற 2-வது வீரர் இவர் ஆவார். இந்நிலையில், அரசியல் தலைவர்கள் மற்றும் பிரபலங்கள் பலரும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
அந்தவகையில் ஆந்திர மாநில முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு, "எங்கள் சொந்த தெலுங்கு பையன், இந்திய கிராண்ட்மாஸ்டர் டி குகேஷ், சிங்கப்பூரில் 18 வயதில் உலகின் இளைய செஸ் சாம்பியனாகி வரலாற்றை எழுதுவதற்கு மனமார்ந்த வாழ்த்துகள்.
அவரது சாதனையை ஒட்டுமொத்த தேசமும் கொண்டாடுகிறது. வரும் காலங்களில் இன்னும் பல வெற்றிகளையும் பாராட்டுகளையும் பெற வாழ்த்துகிறேன்" என்று கூறியுள்ளார்.
இவரின் வாழ்த்து பதிவு தற்போது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அதாவது, சென்னையில் பிறந்தவரான குகேஷ்-யை 'தெலுங்கு பையன்' என்று குறிப்பிடுவது சரியா என்று நெட்டிசன்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
இந்தியாவிற்கு பெருமை தேடி தந்தவரை அனைவரும் கொண்டாடலாம். ஆனால், மொழி வாரியாக பிறப்பது சர்ச்சையை உருவாக்கும் என்று கூறி வருகின்றனர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |