சந்திரபாபு நாயுடு கைது! அமைச்சர் ரோஜா பட்டாசு வெடித்து கொண்டாட்டம்
இந்திய மாநிலம், ஆந்திர பிரதேசத்தின் முன்னாள் முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு கைது செய்யப்பட்டதற்கு அமைச்சர் ரோஜா பட்டாசு வெடித்து கொண்டாடியுள்ளனர்.
சந்திரபாபு நாயுடு கைது
தெலுங்கு தேசம் கட்சியின் தலைவர் சந்திரபாபு நாயுடு. இவர் ஆந்திராவில், கடந்த 2014 முதல் 2019 ஆம் ஆண்டு வரை முதலமைச்சராக இருந்தார். இவருடைய பதவிக்காலத்தில் திறன் மேம்பாட்டு கழகத்தின் நிதியில் ரூ.500 கோடி ஊழல் நடந்துள்ளதாக குற்றச்சாட்டு எழுந்தது.
சில ஆண்டுகளாக இதற்கான விசாரணையை சி.ஐ.டி நடத்தி வந்த நிலையில் நேற்று முன்தினம் சந்திரபாபு நாயுடு அதிரடியாக கைது செய்யப்பட்டார்.

பின்பு, நேற்று காலை விஜயவாடாவில் உள்ள ஊழல் தடுப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். இதையடுத்து, 14 நாள்கள் சந்திரபாபு நாயுடுவை சிறையில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டதால், அவர் ராஜமுந்திரி சிறையில் அடைக்கப்பட உள்ளார்.
இதனிடையே, சந்திரபாபு நாயுடுவின் ஜாமின் மனு தள்ளுபடி ஆனதால் அவரது சிறை தண்டனை உறுதியாகியுள்ளது.
அமைச்சர் ரோஜா கொண்டாட்டம்
இந்நிலையில், சந்திரபாபு நாயுடுவுக்கு சிறை தண்டனை கிடைத்ததையடுத்து ஆந்திர மாநிலத்தில் சுற்றுலாத்துறை அமைச்சரும், நடிகையுமான ரோஜா பட்டாசு வெடித்துக் கொண்டாடினார்.

தனது கட்சி ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் தொண்டர்களுக்கு இனிப்புகள் வழங்கி தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார். இது தொடர்பான புகைப்படம் வெளியாகி வைரலாக பரவி வருகிறது.

ஊழல் வழக்கில் கைது செய்யப்பட்ட ஆந்திர முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடு - பட்டாசு வெடித்து கொண்டாடிய அமைச்சர் ரோஜா!#Roja | #ChandrababuNaidu pic.twitter.com/dh8RbrI0a8
— Priya Gurunathan (@priyaGurunathan) September 10, 2023
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |