ஜெகன்மோகன் ஆட்சியில் மிக மோசமாக துன்புறுத்தப்பட்டேன் - சந்திரபாபு நாயுடு
ஆந்திர பிரதேசத்தில் தனிப்பெரும்பான்மையுடன் வெற்றி பெற்றுள்ள சந்திரபாபு நாயுடு, செய்தியாளர்கள் சந்திப்பில் மக்கள் நலனுக்காக எந்த தியாகத்தையும் செய்ய தயார் என தெரிவித்தார்.
ஆந்திர மாநில சட்டப்பேரவைத் தேர்தலில் தெலுங்கு தேசம் கட்சி தனிப்பெரும்பான்மையுடன் அமோக வெற்றி பெற்றுள்ளது.
இதன்மூலம் அக்கட்சியின் தலைவர் சந்திரபாபு நாயுடு (74) முதல்வராக பதவி ஏற்க உள்ளார். இந்த நிலையில் செய்தியாளர்கள் சந்திப்பில் கலந்துகொண்ட சந்திரபாபு நாயுடு, தேர்தலில் வெற்றி பெற்றது குறித்து விளக்கம் அளித்தார்.
அவர் கூறுகையில், ''மக்கள் நலனுக்காக எந்த தியாகத்தையும் செய்ய தயார். கடந்த 5 ஆண்டுகால ஆட்சியில் மக்கள் பல்வேறு துன்பங்களுக்கு ஆளானார்கள். நான் எதிர்பார்த்ததை விட மக்கள் எங்கள் கட்சிக்கு வாக்களித்துள்ளனர். தெலுங்கு தேசத்திற்குக் கிடைத்த வெற்றி மக்களுக்குக் கிடைத்த வெற்றி.
ஜெகன்மோகன் ஆட்சியில் மிக மோசமாக துன்புறுத்தப்பட்டேன். மக்களுக்கு சேவை செய்ய அதிகாரத்திற்கு வரும்போது அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்யக்கூடாது. நாட்டில் பல்வேறு அரசியல் திருப்பங்களை பார்த்துள்ளேன். பல்வேறு அரசியல் அனுபவம் உள்ளது'' என்று தெரிவித்துள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |