சந்திரயான்-3 திட்டம் வெற்றி: குழந்தைகளுக்கு விக்ரம், பிரக்யான் என பெயர் சூட்டல்
இந்திய மாநிலம், கர்நாடகாவில் பிறந்த குழந்தைகளுக்கு சந்திரயான்-3 திட்டம் வெற்றி பெற்றதை கொண்டாடும் வகையில், விக்ரம், பிரக்யான் என பெயர் சூட்டப்பட்டுள்ளது.
சந்திரயான்-3 திட்டம்
இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையமான இஸ்ரோ, நிலவின் தென்துருவ பகுதியை ஆய்வு செய்வதற்கு சந்திரயான் 3 விண்கலத்தை வடிவமைத்து, எல்.வி.எம்.3 எம்-4 என்ற ராக்கெட் மூலம் கடந்த மாதம் 14 ஆம் திகதி விண்ணில் செலுத்தியது.
அதன்படி, கடந்த 23-ம் தேதி மாலை 6.04 மணிக்கு மாலை சந்திரயான்-3 விண்கத்தின் லேண்டர் பாகம் வெற்றிகரமாக நிலவில் தரையிறங்கியது.
பின்னர், சில மணி நேரங்களுக்கு அடுத்து லேண்டரில் இருந்த ரோவர் வாகனமும் நிலவில் தரையிறங்கப்பட்டது.
குழந்தைகளுக்கு பெயர் சூட்டல்
கர்நாடக மாநிலம் யாதகிரி மாவட்டம் வடகெரே பகுதியை சேர்ந்தவர் மெய்யப்பன் என்பவருக்கு பாலப்பா, நிங்கப்பா ஆகிய இரு மகன்கள் உள்ளனர். இவர்கள் இருவருக்கும் திருமணம் ஆகிவிட்டது.
இதில், கடந்த ஜூலை 28 ஆம் திகதி பாலப்பா மற்றும் நாகம்மா தம்பதிக்கு ஆண் குழந்தையும், கடந்த 18 ஆம் திகதி நிங்கப்பா மற்றும் சிவம்மா தம்பதிக்கு ஆண் குழந்தையும் பிறந்தது.
இந்நிலையில், நிலவில் தரையிறங்கிய சந்திரயான்-3 திட்டம் வெற்றியை கொண்டாடும் வகையில், பாலப்பா தனக்கு பிறந்த குழந்தைக்கு 'விக்ரம்' என்றும், நிங்கப்பா தனக்கு பிறந்த குழந்தைக்கு 'பிரக்யான்' என்றும் பெயர் சூட்டினார்கள்.
இது குறித்து மெய்யப்பன் கூறுகையில்,"நிலவை ஆய்வு செய்ய அனுப்பிய சந்திரயான்-3 வெற்றிக்கு விஞ்ஞானிகள் கடும் பாடுபட்டுள்ளனர். அவர்களை கௌரவப்படுத்தும் விதமாக எனது பேரன்களுக்கு இந்த பெயர்களை சூட்டியுள்ளேன்" என்றார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |