கைரேகைகளை மாற்றிக் கொண்டு நுழைய முயன்ற இரு ஆசிய நாட்டவர்கள்: கண்டுபிடித்து கைது செய்த நாடு
ஆசிய நாட்டவர்கள் இருவர் அறுவை சிகிச்சையால் தங்கள் கைரேகைகளை மாற்றிக் கொண்டு சட்டவிரோதமாக நுழைந்த நிலையில் குவைத் அரசாங்கம் கண்டுபிடித்து கைது செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஆசிய நாட்டவர்கள்
குறித்த நபர்க்ள் இருவரும் எந்த நாட்டவர்கள் என்ற தகவல் வெளியிடப்படாத நிலையில், அவர்கள் ஆசிய நாட்டவர்கள் என மட்டுமே அடையாளப்படுத்தப்பட்டுள்ளது.
@khaleejtimes
பொதுவாக வளைகுடா நாடுகளில் கைரேகைகள் பதியப்படுவது கட்டாயம் என்ற விதி உள்ளது. இந்த நிலையில் அந்த ஆசிய நாட்டவர்கள் இருவரும் அறுவை சிகிச்சையால் கைரேகைகளை மாற்றிக் கொண்டுள்ளனர் என்றே கூறப்படுகிறது.
அத்துடன் தங்கள் அடையாளத்தையும் மறைத்துள்ளனர். ஆனால், அதிகாரிகள் மேம்பட்ட பயோமெட்ரிக்ஸ் ஸ்கேனர்களுடன் பணியாற்றி வருகின்றனர் என்பதை அவர்கள் அறிந்திருக்கவில்லை என்றே கூறப்படுகிறது.
விமான நிலையத்தில் கைது
இதனையடுத்து, ஏற்கனவே பதிவாகியிருந்த அவர்கள் இருவரின் உண்மையான தரவுகள் அனைத்தையும் வெளிக்கொண்டுவந்த அதிகாரிகள் அவர்களை விமான நிலையத்தில் வைத்தே கைது செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அவர்கள் மீது சட்டப்பூர்வ நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் என்றே தகவல் வெளியாகியுள்ளது.
@khaleejtimes
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |