ஜேர்மன் ஜனாதிபதிக்கு அளிக்கப்பட்ட விருந்தில் ரஷ்ய ஆக்கிரமிப்பு குறித்து மன்னர் சார்லஸ் பேச்சு
பிரித்தானியா வந்துள்ள ஜேர்மன் ஜனாதிபதிக்கு அளிக்கப்பட்ட அரசு விருந்தின்போது, ரஷ்ய ஆக்கிரமிப்பு குறித்து பேசியுள்ளார் மன்னர் சார்லஸ்.
ஜேர்மன் ஜனாதிபதிக்கு அளிக்கப்பட்ட விருந்து
ஜேர்மனியின் ஜனாதிபதியான ஃப்ரான்க் வால்ட்டர் ஸ்டெயின்மேயர் (Frank-Walter Steinmeier), தன் மனைவியான எல்க்கா பூடன்பென்டருடன் (Elke Budenbender) மூன்று நாள் அரசு முறைப்பயணமாக பிரித்தானியாவுக்கு வந்துள்ளார்.

மன்னர் சார்லசும் ராணி கமீலாவும் விண்ட்சர் மாளிகையில் ஜேர்மன் ஜனாதிபதி மற்றும் அவரது மனைவியை வரவேற்ற நிலையில், அவர்களுக்கு பிரம்மாண்ட விருந்து ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டது.
மன்னர் உரை விருந்தின்போது உரையாற்றிய மன்னர் சார்லஸ், ரஷ்யா மேலும் தனது ஆக்கிரமிப்பு முயற்சிகளைத் தொடரும் நிலையில், பிரித்தானியாவும் ஜேர்மனியும் ஐரோப்பாவைக் காக்கத் தயாராக இருப்பதாக தெரிவித்தார்.

ரஷ்யா குறித்த எண்ணம் விருந்தினர்களை ஆழ்ந்து சிந்திக்க வைத்திருந்த நேரத்தில், நிலைமையை சற்றே லேசாக்குவதற்காக பிரபல நகைச்சுவை வாக்கியம் ஒன்றையும் மேற்கோள் காட்டினார் மன்னர் சார்லஸ்.
பிரித்தானியாவும் ஜேர்மனியும் கால்பந்து விளையாட்டு மீதான ஆர்வத்தைப் பகிர்ந்துகொள்வது குறித்து குறிப்பிட்ட மன்னர், ’in the end, the Germans win’ என்பதில் கொஞ்சம் உண்மை இருப்பதாகவும் வேடிக்கையாக குறிப்பிட்டார்.

அதாவது, 1990ஆம் ஆண்டு உலகக்கிண்ண கால்பந்து போட்டியின்போது, வர்ணனையாளராக செயல்பட்ட முன்னாள் இங்கிலாந்து அணி வீரரான கேரி லினிக்கர் என்பவர் இந்த வாக்கியத்தைப் பயன்படுத்தினார்.
‘கால்பந்து என்பது ஒரு எளிமையான விளையாட்டு: 22 பேர் 90 நிமிடங்களாக ஒரு பந்தைத் துரத்துவார்கள், ஆனால், இறுதியில், எப்போதுமே ஜேர்மனிதான் போட்டியில் வெற்றிபெறும்’ என்றார் கேரி.
ஜேர்மன் ஜனாதிபதிக்கு விருந்தளிக்கும்போது, கேரியின் கூற்றைத்தான் வேடிக்கையாக மன்னர் சார்லஸ் மேற்கோள் காட்டினார்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |