இந்தியாவிலே முதலிடத்தில் உள்ள சென்னை விமான நிலையம்; உலகளவில் 6வது இடம்

Chennai Airport & Aviation Services
By Karthikraja Nov 09, 2026 11:38 AM GMT
Report

chennai airport remains most punctional in india, 6th in global: Cirium என்ற தரவு பகுப்பாய்வு நிறுவனம், உலகளவில் விமான இயக்க நேர துல்லியத்தின்படி, விமான நிலையங்களின் தரவரிசை பட்டியலை வெளியிட்டுள்ளது.

இதில் அக்டோபர் மாதத்தில், 87.33% நேரத் துல்லியத்துடன் சென்னை விமான நிலையம் இந்தியாவிலே முதலிடத்தில் உள்ளது. மேலும், உலகளவில் 6வது இடத்தில் உள்ளது.

சென்னை விமான நிலையம் முதலிடம்

அக்டோபர் மாதத்தில் சென்னையில் 65 வழித்தடங்களில் 11,189 விமானங்கள் கண்காணிக்கப்பட்டன. 

இந்தியாவிலே முதலிடத்தில் உள்ள சென்னை விமான நிலையம்; உலகளவில் 6வது இடம் | Chennai Airport Remains Most Punctional In India

முந்தைய செப்டம்பர் மாதத்தில், 64 வழித்தடங்களில் 10,023 விமானங்கள் கண்காணிக்கப்பட்டுள்ளது.

இந்த காலக்கட்டதில், 90.06% விமானங்கள் சரியான நேரத்தில் புறப்பட்டு, உலகளவில் 4வது இடத்தில் இருந்துள்ளது.

பெங்களூரு கெம்பேகவுடா சர்வதேச விமான நிலையம், 87% நேரத் துல்லியத்துடன், இந்திய அளவில் 2வது இடத்தையும், உலக அளவில் 10வது இடத்தையும் பிடித்துள்ளது. 

இந்தியாவிலே முதலிடத்தில் உள்ள சென்னை விமான நிலையம்; உலகளவில் 6வது இடம் | Chennai Airport Remains Most Punctional In India

அதைத்தொடர்ந்து, கொல்கத்தா விமான நிலையம் 85.34% நேரத் துல்லியத்துடன் 16வது இடத்தையும், ஹைதராபாத் விமான நிலையம் 84.76% நேரத் துல்லியத்துடன் 19வது இடத்தையும் பிடித்தன.

உலகளவில், சீனாவின் ஹார்பின் தைப்பிங் சர்வதேச விமான நிலையம் 97.58% சரியான நேரப் புறப்பாடு விகிதத்துடன் முதலிடத்தையும், சீனாவின் சன்யா ஃபீனிக்ஸ் சர்வதேச விமான நிலையம் 94.37% உடன் இரண்டாம் இடத்தையும், பெருவின் லிமா சர்வதேச விமான நிலையம் 89.59% உடன் மூன்றாம் இடத்தையும் பிடித்தன. 

Viral Video: விமானத்தில் தீபாவளி கொண்டாட்டம்

Viral Video: விமானத்தில் தீபாவளி கொண்டாட்டம்

சென்னை விமான நிலையத்தில் 3வது முனையம்

சென்னையின் நிலை மேம்பட்டதற்கு, விமானப் பகுதி, முனையம் முழுவதும் செயல்படுத்தப்பட்ட தொடர் நடவடிக்கைகளே காரணம் எனவும், 3வது முனையம் பயன்பாட்டிற்கு வந்ததும் விமான நிலைய செயல்திறன் மேலும் அதிகரிக்கும் என விமான நிலைய இயக்குநர் எம். ராஜா கிஷோர் தெரிவித்துள்ளார். 

இந்தியாவிலே முதலிடத்தில் உள்ள சென்னை விமான நிலையம்; உலகளவில் 6வது இடம் | Chennai Airport Remains Most Punctional In India

விமான நிலையத்தின் நவீனமயமாக்கல் திட்டத்தின் இரண்டாம் கட்டத்தின் கீழ், ரூ. 2,467 கோடி முதலீட்டில், சுமார் 86,135 சதுர மீட்டர் பரப்பளவில் உருவாக்கப்பட்டு வரும் இந்த விமான நிலையத்தின் கட்டுமான பணிகளை 2027 ஜனவரிக்குள் முடித்து, 2027 ஏப்ரலில் திறப்பு விழா நடத்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

விமான நிலையங்கள் இந்த நிலையைத் தக்கவைத்துக் கொள்வது, அதிகரித்து வரும் பயணிகளின் போக்குவரத்தை எவ்வளவு திறம்படக் கையாளுகிறது, தரை மற்றும் வான்பகுதி செயல்பாடுகளை ஒருங்கிணைக்கிறது, மற்றும் அதன் விரிவடைந்து வரும் உள்கட்டமைப்பை ஒன்றிணைக்கிறது என்பதைப் பொறுத்தே அமையும்.

தற்போது, சென்னை விமான நிலையம் ஆண்டுக்குச் சுமார் 2.3 கோடி பயணிகளைக் கையாளுகிறது. இந்த எண்ணிக்கை ஏப்ரல் 2027 க்குள் ஆண்டுக்கு 3.5 கோடி பயணிகளாக அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Toronto, Canada

14 Nov, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

தாவடி, கொக்குவில் மேற்கு, கொழும்பு, அமெரிக்கா, United States, கனடா, Canada

09 Nov, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பளை, இராமநாதபுரம்

22 Oct, 2025
மரண அறிவித்தல்

கொக்குவில் கிழக்கு, Markham, Canada

06 Nov, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

நியூ யோர்க், United States

08 Nov, 2018
13ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, கொழும்பு

10 Nov, 2013
16ம் ஆண்டு நினைவஞ்சலி
39ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

அனலைதீவு, நீர்கொழும்பு, யாழ்ப்பாணம், கிளிநொச்சி, Mississauga, Canada

07 Nov, 2026
மரண அறிவித்தல்

புலோலி கிழக்கு, Northeim, Germany, Birmingham, United Kingdom

28 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், கொழும்பு

08 Nov, 2024
மரண அறிவித்தல்

சில்லாலை, கொழும்பு, நீர்கொழும்பு, London, United Kingdom

21 Oct, 2026
நன்றி நவிலல்

ஹட்டன், நோர்வூட், கொட்டகலை, கொழும்பு

02 Nov, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

அனலைதீவு, யாழ்ப்பாணம், Villepreux, France

04 Nov, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டக்கச்சி, St. Gallen, Switzerland

26 Oct, 2022
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், கொழும்பு

08 Nov, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

திருகோணமலை, Zürich, Switzerland

03 Nov, 2025
மரண அறிவித்தல்

கொழும்பு, London, United Kingdom

26 Oct, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US