ஜப்பானில் ஸ்ட்ராங்கான பெர்ஃபியூம் பயன்படுத்திய சென்னைப் பெண் கூறும் ஆச்சரிய தகவல்
ஜப்பானில் வாழும் இந்தியாவின் சென்னையைச் சேர்ந்த பெண்ணொருவர் தனது சகப் பணியாளர் ஒருவரிடமிருந்து புதிய விடயம் ஒன்றைக் கற்றுக்கொண்டதாக தெரிவித்துள்ளார்.
ஸ்ட்ராங்கான பெர்ஃபியூம் பயன்படுத்திய சென்னைப் பெண்
அதாவது, அனுஷா என்னும் அந்தப் பெண்ணிடம் அவரது சகப் பணியாளர், அனுஷாவின் பெர்ஃபியூம் ஸ்ட்ராங்காக இருப்பதாக தெரிவித்துள்ளார்.
விடயம் என்னவென்றால், ஜப்பானில் ஸ்ட்ராங்கான பெர்ஃபியூம் பயன்படுத்துவது, தொல்லை கொடுத்தலாக (harassment) கருதப்படுமாம்.
அதற்கு, sumehara என்னும் பதமே உள்ளது. அதிகப்படியான வாசனை கொண்ட பெர்ஃபியூம் பயன்படுத்துவது, சுயசுத்தம் சரியாக இல்லாததால் உடலிலிருந்து துர்நாற்றம் வீசுவது, புகைபிடித்து அருகிலுள்ளவர்களுக்கு இடைஞ்சலை ஏற்படுத்துவது முதலான விடயங்கள் sumehara என அழைக்கப்படுகின்றன.
ஜப்பான் அலுவலகங்கள், இப்படி அதிகப்படியான வாசனை கொண்ட பெர்ஃபியூம் பயன்படுத்துவது, உடலிலிருந்து துர்நாற்றம் வீசுவது போன்ற விடயங்களால் சகப்பணியாளர்களுக்கு தொந்தரவு கொடுப்பதை தவிர்க்குமாறு கேட்டுக்கொள்வதுண்டாம்.
ஆக, இப்படி ஒரு புதிய விடயத்தை ஜப்பானில் கற்றுக்கொண்டேன் என்று கூறியுள்ள அனுஷா, ஜப்பானுக்கு வந்தீர்களென்றால் இந்த விடயத்தை நினைவில் வைத்துக்கொள்ளுங்கள் என்றும் கூறியுள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |