பாகிஸ்தானின் முக்கிய திட்டத்தில் இருந்து விலகிய சீனா - இந்தியா உடனான நெருக்கம் காரணமா?
பாகிஸ்தானின் முக்கிய ரயில் திட்டத்தில் இருந்து சீனா விலகி உள்ளது.
பாகிஸ்தானுக்கு நிதி வழங்க சீனா மறுப்பு
பாகிஸ்தான் அதன் அண்டை நாடான சீனாவுடன் நட்பு நாடாக இருந்து வந்தது. இதன் காரணமாக பாகிஸ்தானுக்கு கடன் வழங்குவது, அதன் உள்கட்டமைப்புகளை மேம்படுத்துவது என சீனா செயல்பட்டு வந்தது.
பாகிஸ்தானின் ராணுவத்தில் உள்ள பெரும்பாலான ஆயுதங்கள், விமானங்கள், கப்பல்கள் சீன தயாரிப்பு ஆகும்.
சமீபத்தில், இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே ஏற்பட்ட மோதலின் போதும், சீனா பாகிஸ்தானுக்கு ஆதரவாக கருத்து தெரிவித்தது.
சீனா பாகிஸ்தான் பொருளாதார வழித்தடம்(CPEC) திட்டத்தின் ஒரு பகுதியாக, பாகிஸ்தானில் கராச்சி - ரோஹ்ரி பிரிவு இடையேயான ரயில்வேயை மேம்படுத்த பாகிஸ்தான் திட்டமிட்டது.
CPEC என்பது, சீனாவின் வடமேற்கு ஜின்ஜியாங் பகுதியை பாகிஸ்தானின் அரேபிய கடல் துறைமுகமான குவாதருடன் சாலைகள், ரயில்வே, குழாய்வழிகள் மற்றும் எரிசக்தி திட்டங்கள் மூலம் இணைப்பதை நோக்கமாகக் கொண்ட ஒரு முக்கிய உள்கட்டமைப்பு திட்டமாகும்.
இந்நிலையில், இந்த ரயில் திட்டத்திற்கு நிதி உதவி அளிக்க சீனா மறுத்து, இதில் இருந்து விலகியுள்ளது.
இதன் காரணமாக, ஆசிய மேம்பாட்டு வங்கியிடம் 2 பில்லியன் டொலர் நிதி உதவி வழங்குமாறு பாகிஸ்தான் கோரிக்கை வைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
பாகிஸ்தான் நிதி நிலைமை மற்றும் கடன் திருப்பி செலுத்தாத தன்மை காரணமாக கூறப்பட்டாலும், அமெரிக்காவுடனான பாகிஸ்தானின் நட்பு, சீனாவின் இந்தியாவுடனான நெருக்கம் ஆகியவை சீனாவின் விலகலுக்கு முக்கிய காரணமாக கருதப்படுகிறது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |