சென்னையில் நடந்த பைக் ரேசிங் போட்டி; 13 வயது ரைடர் மரணம்
சென்னையில் நடந்த சாம்பியன்ஷிப் போட்டியின் போது நடந்த விபத்தில் பெங்களூரைச் சேர்ந்த இளம் பைக் ரைடர் ஸ்ரேயாஸ் ஹரீஷ் உயிரிழந்தார். இது குறித்த தகவல்கள் இதோ.
பைக் ரேசர் ஸ்ரேயாஸ் ஹரீஷ் மரணம்
பெங்களூருவை சேர்ந்த 13 வயது இளம் பைக்கர் ஸ்ரேயாஸ் ஹரிஷ் மோட்டார் சைக்கிள் பந்தயத்தின் போது ஏற்பட்ட பயங்கர விபத்தில் உயிரிழந்தார்.
சென்னையில் உள்ள மெட்ராஸ் இன்டர்நேஷனல் சர்க்யூட்டில் சனிக்கிழமை நடைபெற்ற எம்ஆர்எஃப் எம்எம்எஸ்சி எஃப்எம்எஸ்சிஐ இந்திய தேசிய மோட்டார் சைக்கிள் ரேசிங் சாம்பியன்ஷிப்பின் மூன்றாவது சுற்றில் பெங்களூரைச் சேர்ந்த பைக்கர் ஷ்ரேயாஸ் ஹரிஷ் பங்கேற்றார்.
பந்தயத்தில் ஈடுபட்டபோது விபத்தில் சிக்கி தலையில் பலமாக அடிபட்டார். இச்சம்பவத்தையடுத்து, போட்டி உடனடியாக நிறுத்தப்பட்டது.
Photo: FMSCI
ட்ராக்கில் நிறுத்தப்பட்டிருந்த ட்ராமா கேர் ஆம்புலன்ஸில் அவர் அருகிலுள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். உடனடியாக அவருக்கு அவசர சிகிச்சை அளிக்கப்பட்டது, ஆனால் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே அவர் உயிரிழந்தார்.
அனைத்து போட்டிகளும் ரத்து
சிறுவனின் சோகமான சம்பவத்தைத் தொடர்ந்து, சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் திட்டமிடப்பட்ட மீதமுள்ள பந்தயங்கள் மெட்ராஸ் மோட்டார் ஸ்போர்ட்ஸ் கிளப்பால் ரத்து செய்யப்பட்டுள்ளன.
யார் இந்த ஷ்ரேயாஸ் ஹரிஷ்?
ஷ்ரேயாஸ் பெங்களூருவில் உள்ள தனியார் பள்ளி மாணவர். ஜூலை 26, 2010-ல் பிறந்தார். கடந்த காலங்களில் தேசிய அளவிலான பல மோட்டார் சைக்கிள் போட்டிகளில் பங்கேற்று வெற்றி பெற்றுள்ளார். தொடர்ந்து நான்கு முறை தேசிய அளவில் ஏராளமான பந்தயங்களில் வெற்றி பெற்று பைக் பந்தயத்தில் வளர்ந்து வரும் நட்சத்திரமாக புகழப்பட்டார்.
Shreyas Hareesh/autocarindia
இந்த ஆண்டு மே மாதம் மினிஜிபி இந்தியா பட்டத்தை வென்ற ஷ்ரேயாஸ், ஸ்பெயினில் நடந்த மினிஜிபி பந்தயங்களில் பங்கேற்று, இரண்டு பந்தயங்களிலும் முறையே ஐந்தாவது மற்றும் நான்காவது இடத்தைப் பிடித்தார். இந்த ஆகஸ்ட் மாதம் மலேசியாவில் உள்ள செபாங் சர்க்யூட்டில் MSBK சாம்பியன்ஷிப் 2023-ல் பங்கேற்க அவர் முடிவு செய்துள்ளார். இதற்கிடையில் இந்த சோகம் நடந்துள்ளது.
ஸ்ரேயாஸ் மரணம் மிகப்பெரிய இழப்பு
திறமையான இளம் வீரரை இழந்தது சோகம். தனது அற்புதமான பந்தயத் திறமையால் புதிய அலைகளை உருவாக்கிக்கொண்டிருந்த ஸ்ரேயாஸ் உயிரிழந்தது பெரும் இழப்பு. இந்தச் சம்பவம் காரணமாக இந்த வார இறுதி நிகழ்ச்சியை ரத்து செய்ய முடிவு செய்துள்ளோம் என்று எம்எம்எஸ்சி தலைவர் அஜித் தாமஸ் தெரிவித்தார்.
Shreyas Hareesh/thebridge
இந்த ஆண்டில் இரண்டாவது மரணம்
2023-ஆம் ஆண்டில் இந்திய மோட்டார் ஸ்போர்ட்ஸில் இது இரண்டாவது மரணம். மெட்ராஸ் இன்டர்நேஷனல் சர்க்யூட்டில் நடந்த MRF MMSC FMSCI இந்தியன் நேஷனல் கார் ரேசிங் சாம்பியன்ஷிப் 2022-ன் இரண்டாவது சுற்றில் ஒரு விபத்துக்குப் பிறகு பிரபல பந்தய வீரர் கே.இ.குமார் (59) ஜனவரி மாதம் காலமானார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |
Copparam Shreyas Hareesh, Shreyas Hareesh Death, young Racer Dies, Indian National Motorcycle Racing Championship, Motorcycle Racing