வணிக வளாகத்தில் பயங்கர தீ விபத்து: மொட்டை மாடியில் தஞ்சமடைந்த 50 பேர்
சென்னை தி.நகரில் உள்ள வணிக வளாகத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கிய 50 பேர் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளனர்.
சென்னை தியாகராய நகர் பாண்டிபஜார் சாலையில் உள்ள வணிக வளாகம் ஒன்றில் தனியார் வங்கி, துணிக்கடை, நிதி நிறுவனம் உள்ளிட்ட பல்வேறு நிறுவனங்கள் இயங்கி வருகின்றன.
இந்நிலையில் இன்று பிற்பகல் திடீரென தீ விபத்து ஏற்பட்டது, வளாகத்துக்குள் இருந்த 50 பேர் மொட்டை மாடியில் தஞ்சமடைந்தனர்.
தகவலறிந்து விரைந்து வந்த தீயணைப்பு படையினர் 1 மணிநேர போராட்டத்துக்கு பின்னர் தீயை கட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர்.
இதனைத் தொடர்ந்து மொட்டை மாடியில் இருந்த அனைவரும் பத்திரமாக மீட்கப்பட்டனர்.
முதற்கட்ட விசாரணையில், முதல் தளத்தில் ஏற்பட்ட தீ பிற தளங்களுக்கும் பரவியுள்ளது தெரியவந்துள்ளது, மேலும் வணிக வளாகம் பயங்கரமாக சேதமடைந்துள்ளது.
இந்த தீ விபத்து எப்படி ஏற்பட்டது? என்பது குறித்து இன்னும் முழுமையான தகவல் வெளியாகவில்லை.