உருகி உருகி காதலித்தோம்! மாணவியை ரயில்முன் தள்ளி கொன்ற காதலன் வாக்குமூலம்
நானும் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்துகொள்ள நினைத்தேன் காதலன் சதீஷ் வாக்குமூலம்.
கட்டாயப்படுத்தி பேச முயற்ச்சித்தபோது ஏற்பட்ட தகராறில் ரயில் முன் தள்ளிவிட்டேன்.
சென்னை பரங்கிமலை ரயில் நிலையத்தில் கல்லூரி மாணவியை ரயில் வரும்போது தண்டவாளத்தில் தள்ளி கொலை செய்த வழக்கில், காதலன் சதீஷ் பரபரப்பு வாக்குமூலம் கொடுத்துள்ளார்.
வியாழக்கிழமை மதியம் மாணவி சத்யாவை கொலை செய்துவிட்டு தப்பிச்சென்ற சதீஷை இன்று (வெள்ளிக்கிழமை) காலை கிழக்கு கடற்கரை சாலையில் சுற்றித் திரிந்த நிலையில் பொலிசார் கைது செய்தனர்.
கல்லூரி மாணவியை ரயில் முன் தள்ளி கொன்ற காதலனை பிடிக்க 7 தனிப்படை அமைப்பு
இதையடுத்து அவரிடம் விசாரணை நடத்தியதில் சதீஷ் இந்த சம்பவம் குறித்து பொலிஸாரிடம் வாக்குமூலம் அளித்துள்ளார்.
சதீஷும் சத்யாவும் கடந்த 5 வருடங்களாக உருகி உருகி காதலித்து வந்ததாகவும், பெற்றோரின் எதிர்ப்பால் சத்யா தனது காதலை முறித்துக்கொண்டதாகவும் கூறியுள்ளார்.
சத்யா தினமும் பரங்கிமலை ரயில் நிலையத்திற்கு வருவார் என்பதை நன்கு அறிந்த சதீஷ், நேற்று தங்கள் காதல் விவகாரம் குறித்து சத்யாவிடம் பேசுவதற்காக சென்றுள்ளார். ஆனால், சத்யா சதீஷை தவிர்த்துள்ளார்.
அப்போது, கட்டாயப்படுத்தி பேச முயற்சித்தபோது ஏற்பட்ட தகராறில் சத்யாவை ரயில் முன் தள்ளிவிட்டதாக ஒப்புக்கொண்டார்.
மேலும், அவரை தள்ளிவிட்டு தானும் ரயில் முன் பயந்து தற்கொலை செய்துகொள்ள திட்டமிட்டதாகவும், ஆனால் அருகில் இருந்த பயணிகள் தன்னை பிடிக்க வந்ததால் அங்கிருந்து ஓடி தப்பிவிட்டதாக தனது வாக்குமூலத்தில் கூறியுள்ளார்.
இதனிடையே, மகள் உயிரிழந்த துக்கத்தில் சத்யாவின் தந்தை மாணிக்கம் மாரைடைப்பால் இன்று காலை உயிரிழந்தார்.