நாவூறும் சுவையில் செட்டிநாடு காடை மிளகு வறுவல்.., எப்படி செய்வது?
என்றாவது ஒருநாள் இந்த செட்டிநாடு காடை மிளகு வறுவல் தயாரித்து சாப்பிட்டு பாருங்கள் மிகவும் சுவையாக இருக்கும்.
இந்த சுவையான செட்டிநாடு காடை மிளகு வறுவலை எப்படி செய்வது என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
- காடை- 1kg
- இஞ்சி பூண்டு பேஸ்ட்- 2 ஸ்பூன்
- உப்பு- தேவையான அளவு
- தேங்காய் எண்ணெய்- 4 ஸ்பூன்
- பச்சை மிளகாய்- 2
- நெய்- 3 ஸ்பூன்
- வெங்காயம்- 3
- தக்காளி- 2
- சீரகம்- 1
- தனியா தூள்- ஒரு ஸ்பூன்
- மிளகாய் தூள்- 1 ஸ்பூன்
- மஞ்சள் தூள்- ½ ஸ்பூன்
- மிளகு தூள்- 1 ஸ்பூன்
- காய்ந்த மிளகாய்- 3
- பூண்டு- 10 பல்
- கொத்தமல்லி- சிறிதளவு
- பட்டை- 2
- ஏலக்காய்- 2
- கிராம்பு- 2
செய்முறை
முதலில் வாணலில் தேங்காய் எண்ணெய் ஊற்றி சூடானதும் பட்டை, கிராம்பு, ஏலக்காய் இடித்து போட்டு வறுக்கவும்.
பின் சீரகம், இஞ்சிபூண்டு பேஸ்ட், பச்சை மிளகாய், காய்ந்த மிளகாய் போட்டு கிளறி விடவும்.
அடுத்து வெங்காயத்தை பொடிதாக நறுக்கி சேர்த்து வதங்கியவுடன் தக்காளி போட்டு வதக்கவும்.
இதற்கடுத்து நன்கு வறுத்தபிறகு மல்லி தூள், மஞ்சள் தூள், மிளகாய் தூள் சேர்த்து கலந்து சுத்தம் செய்த காடையை வெட்டி போடுங்கள்.
பின்னர் சிறிதளவு தண்ணீர் ஊற்றி தேவையான அளவு உப்பு போட்டு காடையை வேக விடவும்.
காடை நன்கு வெந்த பிறகு அடுப்பை அனைத்து எடுத்துக்கொள்ளவும்.
இறுதியாக ஒரு தோசைக்கல்லில் நெய் ஊற்றி, பூண்டு, மிளகு தூள் போட்டு வேகவைத்த காடையை சேர்த்து கலந்துவிட்டு கொத்தமல்லி தூவினால் செட்டிநாடு காடை மிளகு வறுவல் ரெடி.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |