8 வயது சிறுமியை தலையில் சுட்டுக் கொன்ற கொடூரன்! காப்பாற்ற போராடிய தந்தை- அதிர்ச்சி சம்பவம்
அமெரிக்காவில் 8 வயது சிறுமி துப்பாக்கியால் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
தந்தையுடன் விளையாடிக் கொண்டிருந்த சிறுமி
சிகாகோ நகரில் அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வருபவர் மைக்கேல் மெடினா. இவர் தனது 8 வயது மகள் சரபி மெடினா உடன் போர்ட்டேஜ் பூங்காவில் விளையாடிக் கொண்டிருந்தார்.
இரவு 8.40 மணியளவில் தந்தை-மகள் இருவரும் விளையாடிக் கொண்டிருந்தபோது, திடீரென அங்கு வந்த நபர் ஒருவர் சிறுமியின் தலையில் துப்பாக்கியால் சுட்டார்.
இதனையடுத்து மகளை காப்பாற்ற அந்நபருடன் மைக்கேல் மெடினா போராடியுள்ளார். பின்னர் உடனடியாக சிறுமி சரபி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.
பரிதாபமாக உயிரிழப்பு
ஆனால் அவர் அங்கு உயிரிழந்து விட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் பொலிஸார் துப்பாக்கிதாரியை கைது செய்தனர்.
அவரின் பெயர் மைக்கேல் குட்மேன் என்பது தெரிய வந்துள்ளது. அவர் மீது முதல் நிலை கொலைக் குற்றம்சாட்டப்பட்டுள்ள நிலையில், திங்கட்கிழமை அன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |