சிகாகோ இரவு விடுதி அருகே துப்பாக்கிச்சூடு: நால்வர் பலி, 14 பேர் காயம்!
சிகாகோ இரவு விடுதி அருகே நடந்த துப்பாக்கி சூடு சம்பவத்தில் 4 பேர் வரை கொல்லப்பட்டுள்ளனர்.
சிகாகோவில் துப்பாக்கிச்சூடு
அமெரிக்காவின் சிகாகோ நகரில் நேற்று (ஜூலை 3) இரவு விடுதி ஒன்றுக்கு வெளியே நடந்த துப்பாக்கிச்சூட்டில் குறைந்தது நான்கு பேர் கொல்லப்பட்டனர் மற்றும் 14 பேர் காயமடைந்தனர்.
அந்த இரவு விடுதியில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டவர்கள் வெளியேறிக் கொண்டிருந்தபோது இந்த துயரச் சம்பவம் நிகழ்ந்துள்ளது.
இரவு 11 மணியளவில், அந்த இரவு விடுதியை கடந்து சென்ற கார் ஒன்றில் இருந்தே இந்த துப்பாக்கி சூடு நடத்தப்பட்டுள்ளது.
துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்த நான்கு பேரும் 24 முதல் 27 வயதுக்கு உட்பட்டவர்கள் என அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர்.
இந்தத் துப்பாக்கி சூடு தொடர்பாக இதுவரை யாரும் கைது செய்யப்படவில்லை, மேலும் தாக்குதலுக்கான பின்னணி குறித்து எந்த தகவலும் வெளியாகவில்லை. விசாரணைகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |