சிக்கன் ரைஸ் சாப்பிட்டு முதியவர் இறந்த சம்பவத்தில் அதிரடி திருப்பம்! கைதான பேரனின் வாக்குமூலம்
தமிழக மாவட்டம் நாமக்கல்லில் சிக்கன் ரைஸ் சாப்பிட்டு முதியவர் உயிரிழந்த சம்பவத்தில், அவரது பேரன் கைது செய்யப்பட்டுள்ளார்.
சிக்கன் ரைஸ்
நாமக்கல் மாவட்டம் தேவராயபுரத்தைச் சேர்ந்த இளைஞர் பகவதி (20). இவர் தனது குடும்பத்தினருக்கு என 7 சிக்கன் ரைஸ் பார்சல் வாங்கி கொடுத்துள்ளார்.
அதனை சாப்பிட்ட தாத்தா சண்முகம் (67), தாய் நதியா (40) இருவரும் உடல்நலம் பாதிக்கப்பட்டனர். உடனடியாக அவர்கள் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
இதுகுறித்து பொலிஸார் விசாரணை நடத்தியபோது சிக்கன் ரைஸில் பூச்சிக்கொல்லி மருந்து கலந்திருந்தது தெரிய வந்தது.
இதனைத் தொடர்ந்து சிக்கன் ரைஸ் வாங்கப்பட்ட உணவகத்தின் உரிமையாளர் ஜீவனந்தத்திடம் பொலிஸார் விசாரணை நடத்தினர்.
சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு
இதற்கிடையில், சிகிச்சை பலனின்றி சண்முகம் உயிரிழந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த நிலையில், சண்முகத்தின் பேரன் பகவாதியிடம் பொலிஸார் விசாரணை நடத்தியபோது வழக்கில் அதிரடி ஏற்பட்டது.
கல்லூரி மாணவரான பகவதி முறை தவறிய உறவில் இருந்ததை, தாத்தா சண்முகம் கண்டித்துள்ளார். இதனால் அவரை கொலை செய்ய திட்டமிட்ட பகவதி, வாங்கி வந்த சிக்கன் ரைஸில் பூச்சிக்கொல்லி மருந்தை கலந்து கொடுத்துள்ளார் என்பது தெரிய வந்துள்ளது.
இதனையடுத்து பகவதியை கைது செய்த பொலிஸார், வழக்குப்பதிவு செய்து சிறையில் அடைத்தனர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |