வாக்னர் கூலிப்படைக்கு இனி யார் தலைவர்: கசிந்த தகவல்
ரஷ்யாவின் வாக்னர் கூலிப்படை தலைவன் எவ்ஜெனி பிரிகோஜின் விமான விபத்தில் கொல்லப்பட்டதாக உறுதி செய்யப்பட்ட நிலையில், அந்த குழு இனி யார் கட்டுப்பாட்டில் இயங்கும் என்ற தகவல் கசிந்துள்ளது.
ரஷ்ய கட்டுப்பாட்டில் செயல்படும்
வாக்னர் கூலிப்படை தலைவர் எவ்ஜெனி பிரிகோஜின் உட்பட 10 பேர் கொண்ட குழு விமான விபத்தில் சிக்கி பலியானது. குறித்த விபத்து தொடர்பில் பல்வேறு கருத்துகள் முன்வைக்கப்பட்டும் வருகிறது.
@AP
ரஷ்ய ராணுவம் விமானத்தை சுட்டு வீழ்த்தியதாகவும், அந்த விமானத்தில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த வெடிகுண்டு வெடித்து, பயணிகள் அனைவரும் கொல்லப்பட்டதாகவும் கூறப்படுகிறது.
இந்த நிலையில், விமான விபத்தில் எவ்ஜெனி பிரிகோஜின் கொல்லப்படுவதற்கும் ஒருநாள் முன்பு லிபியா சென்ற ரஷ்ய அதிகாரி ஒருவர், இனி வாக்னர் கூலிப்படை ரஷ்யாவின் கட்டுப்பாட்டில் செயல்படும் எனவும், அவர்கள் தொடர்ந்து லிபியாவில் சேவையாற்றுவார்கள் எனவும் உறுதி அளித்துள்ளதாக கூறப்படுகிறது.
மேலும், லிபியாவில் களமிறக்கப்பட்டுள்ள வாக்னர் கூலிப்படையினர் புதிய தளபதியிடம் இனி தகவல் பரிமாற்றம் முன்னெடுக்கப்பட வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
@AP
புடினால் ஆதரிக்கப்படவில்லை
இது தற்செயலானதா அல்லது திட்டமிடப்பட்டதா என்பது குறித்து உறுதி செய்யப்படவில்லை. மட்டுமின்றி, வாக்னர் கூலிப்படை முன்னெடுத்த கிளர்ச்சிக்கு பின்னரும் எவ்ஜெனி பிரிகோஜின் உட்பட ராணுவ தலைவர்களுடன் முன்னெடுக்கப்பட்ட ரகசிய ஆலோசனைக் கூட்டம் என்பது,
வாக்னர் கூலிப்படையால் கட்டமைக்கப்பட்ட உலகளாவிய தொடர்பினை ரஷ்யா முன்னெடுத்துச் செல்லும் என்றே உறுதியாகியுள்ளது. வாக்னர் கூலிப்படையானது சிரியா, லிபியா, மத்திய ஆபிரிக்க குடியரசு மற்றும் மாலி ஆகிய நாடுகளில் உள்நாட்டுப் போர்கள் மற்றும் கிளர்ச்சிகளில் பங்கேற்றுள்ளதுடன்,
பதிலுக்கு தங்கச் சுரங்கங்கள் மற்றும் எண்ணெய் வயல்களையும் கட்டுப்படுத்தி வருகிறது. வாக்னர் கூலிப்படை ஒப்பந்த அடிப்படையில் செயல்பட்டு வருவதால், அதன் செயல்பாடுகள் நீடிக்கும் என்றே எழுத்தாளர் ஒருவர் குறிப்பிடுகிறார்.
மேலும், வாக்னர் கூலிப்படையின் ஜூன் மாத கிளர்ச்சிக்கு பின்னர் ஆப்பிரிக்காவில் வாக்னரின் இருப்பை வலுப்படுத்த பிரிகோஜின் தனது முயற்சிகளை தீவிரப்படுத்தினார் என்றே கூறப்படுகிறது.
இது விளாடிமிர் புடினால் ஆதரிக்கப்படவில்லை எனவும், வாக்னர் கூலிப்படையின் செயல்பாடுகளை கைப்பற்ற இன்னொரு கூலிப்படையை உருவாக்க விளாடிமிர் புடின் ஆலோசனை மேற்கொண்டு வந்தார் எனவும் தகவல் கசிந்துள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |