தீவிபத்தில் பிரபல குழந்தை நட்சத்திரம் உட்பட இருவர் பலி
இந்தியாவின் ராஜஸ்தானில், தீவிபத்தொன்றில் பிரபல குழந்தை நட்சத்திரமும், அவரது சகோதரரும் உயிரிழந்த துயர சம்பவம் ஒன்று நிகழ்ந்துள்ளது.
பிரபல குழந்தை நட்சத்திரம் உட்பட இருவர் பலி
Shrimad Ramayan என்னும் தொலைக்காட்சித் தொடரில் நடித்து பிரபலமான வீர் ஷர்மா (10) என்னும் சிறுவனும், அவனது அண்ணனான Shoriya (15)வும் நேற்று ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 2.00 மணியளவில் தீவிபத்தொன்றில் பலியானார்கள்.

அந்த தீ, மின்கசிவால் ஏற்பட்டதாக கருதப்படும் நிலையில், பிள்ளைகள் வசித்துவந்த அந்த வீட்டிலிருந்து புகை எழுவதைக் கண்ட அக்கம்பக்கத்து வீட்டுக்காரர்கள் கதவை உடைத்து தீயணைப்புக்கருவிகள் உதவியுடன் தீயை அணைத்துள்ளார்கள்.
தூங்கிக்கொண்டிருந்த பிள்ளைகள் இருவரும் சுயநினைவற்றுக் கிடக்க, உடனடியாக அவர்கள் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளார்கள்.
ஆனால், அவர்களை பரிசோதித்த மருத்துவர்கள் அவர்கள் இருவரும் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்துள்ளார்கள்.
தீயால் அவர்கள் பெரிய அளவில் பாதிக்கப்படாவிட்டாலும், வீட்டுக்குள் சூழ்ந்திருந்த புகை காரணமாக மூச்சுத்திணறி அவர்கள் உயிரிழந்துள்ளதாக கருதப்படுகிறது.
பிள்ளைகளின் தந்தையான ஜிதேந்திர ஷர்மா பக்தி நிகழ்ச்சி ஒன்றிற்காக சென்றிருந்திருக்கிறார்.
நடிகையான தாய் ரீற்றா ஷர்மா மும்பையில் இருக்க, பிள்ளைகள் இருவரும் தனியாக வீட்டில் தூங்கிக்கொண்டிருந்தபோது இந்த அசம்பாவிதம் நிகழ்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |