சொகுசுக் கப்பலிலிருந்து விழுந்த குழந்தை: திகிலை ஏற்படுத்திய சம்பவம்
டிஸ்னி சுற்றுலா கப்பலில் பயணித்துக்கொண்டிருந்த ஒரு நபரின் குழந்தை, கப்பலின் நான்காவது தளத்திலிருந்து கடலில் விழுந்த சம்பவம் பதைபதைப்பை ஏற்படுத்தியுள்ளது.
சொகுசுக் கப்பலிலிருந்து விழுந்த குழந்தை
பஹாமாஸ் தீவுகளிலிருந்து ப்ளோரிடா நோக்கிப் பயணித்துக்கொண்டிருந்துள்ளது, டிஸ்னி நிறுவனத்துக்கு சொந்தமான சுற்றுலா சொகுசுக் கப்பல் ஒன்று. அப்போது, கப்பலின் நான்காவது தளத்தில், ஒருவர் தன் மகளை கைப்பிடி சுவர் மீது உட்காரவைத்து புகைப்படம் எடுத்துக்கொண்டிருந்திருக்கிறார்.
திடீரென அந்தக் குழந்தை தவறி கடலில் விழ, பார்த்துக்கொண்டிருந்தவர்கள் பதறி சத்தமிட, மகளைக் காப்பாற்றுவதற்காக அந்த தந்தையும் கடலில் குதித்துள்ளார்.
அதற்குள், தகவலறிந்த கப்பலின் மீட்புக் குழுவினர் விரைந்து அந்தக் குழந்தையையும் அதன் தந்தையையும் மீட்டுள்ளனர்.
10 முதல் 15 நிமிடங்களுக்குள் அவர்கள் இருவரும் மீட்கப்பட, நிம்மதிப்பெருமூச்சு விட்ட சக பயணிகள் உற்சாக குரல் எழுப்பியுள்ளார்கள்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |