ஓடும் காரிலிருந்து நடு ரோட்டில் விழுந்த குழந்தை; பின்னர் நடந்த அதிசயம்! பரபரப்பான வீடியோ காட்சி
ஒரு பிஸியான சாலையில் ஓடும் காரில் இருந்து ஒரு குழந்தை விழுந்த பயங்கரமான வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது.
சமூக ஊடகங்களில் வைரலாகி வரும் இந்த அதிர்ச்சியூட்டும் வீடியோவில், நூற்றுக்கனக்கான வாகனங்கள் சென்றுகொண்டிருக்கும் சாலையில், ஒரு வயது மதிக்கத்தக்க குழந்தை, ஓடிக்கொண்டிருக்கும் SUV காரிலிருந்து விழுந்துள்ளது.
சாலையில் விழுந்த அடுத்த நொடியில், குழந்தை எழுந்து காரை நோக்கி ஓடுவதைக் காணமுடிகிறது. அப்போது ஸ்கூட்டரில் சென்ற ஒரு பெண் குழந்தை ஓடாமல் கையைப் பிடித்து நிறுத்திகிறார்.
அதே சமயம் அந்த SUV கார் 50 அடி தூரத்தில் சென்று நிற்கிறது, அதிலிருந்து குழந்தையின் தாய் பதறியடித்தக்கொண்டு ஓடிவந்து, குழந்தையை தூக்கிச் செல்கிறார்.
குழந்தை விழுந்த நேரத்தில் பின்னால் வந்த மற்ற வாகனங்கள் அனைத்தும் சுதாரித்துக்கொண்டு நிறுத்திவிட்டதால், குழந்தை உயிர் தப்பியது. அதேபோல், வேகமாக வண்டியிலிருந்து கீழே விழுந்த போதிலும் குழந்தைக்கு அடிபடவில்லை.
இதனால் அந்த குழந்தையை மிகவும் அதிர்ஷ்டமான குழந்தை என்றும், குழந்தை எந்த ஆபத்தும் இல்ல்லாமல் தப்பித்தது அதிசயம் என்றும் நெட்டிசன்கள் கூறிவருகின்றனர்.
தேதி மற்றும் இடம் குறிப்பிடப்படாத இந்த வீடியோவை ஷிரின் கான் என்ற பயனர் ட்விட்டரில் பகிர்ந்துள்ளார். இந்த வீடியோ தற்போது வைரலாகிவருகிறது.
How can this even happen? pic.twitter.com/WXnWLeYIQY
— Shirin Khan شیرین (@KhanShirin0) March 16, 2021