பள்ளி நாடகத்தில் கணவன்-மனைவியாக நடித்த குழந்தைகள்: 20 ஆண்டுகளுக்கு பிறகு உண்மை ஜோடியான கதை
மழலையர் பள்ளி நாடகத்தில் ஜோடியாக நடித்த குழந்தைகள் 20 ஆண்டுகளுக்கு பிறகு சந்தித்துக் கொண்டு உண்மையான தம்பதிகளாக மாறியுள்ளனர்.
நாடக ஜோடி, உண்மை ஜோடியான கதை
பல தசாப்தங்களுக்கு முன்பு மழலையர் பள்ளி நாடகத்தில் கணவன் மனைவியாக நடித்த ஒரு சீன ஜோடி, விதிவசமாக மீண்டும் இணைந்து திருமணம் செய்து கொண்டனர்.
குவாங்டாங் மாகாணத்தைச் சேர்ந்த இளைஞரான ஜெங் மற்றும் அவரது மனைவி ஜனவரி 7ம் திகதி அன்று திருமணம் செய்து கொண்டனர்.
அவர்களின் திருமண விழாவில், அவர்களது குழந்தைப் பருவத்தின் ஒரு மனம் திறக்கும் காட்சி ஒளிபரப்பப்பட்டு விருந்தினர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.
அதில் இருபது ஆண்டுகளுக்கு முன்பு, ஜெங் மற்றும் அவரது எதிர்கால மனைவி இருவரும் ஒரே மழலையர் பள்ளியில் பயின்றதும், அப்போது பள்ளி நிகழ்ச்சியின் போது, அவர்கள் இருவரும் கணவன் மனைவியாக நாடகத்தில் நடித்துள்ளனர்.
அதில் சிறுமி வெள்ளை நிற ஆடையிலும், சிறுவன் கருப்பு நிற சூட்டிலும் அலங்கரிக்கப்பட்டு இருந்தனர்.
நீண்ட நாள் தேடல்
மழலையர் பள்ளி நாட்களுக்குப் பிறகு, அவர்கள் வெவ்வேறு பள்ளிகளில் படித்ததால் அவர்களுக்கிடையே தொடர்பு முற்றிலும் துண்டிக்கப்பட்டது.
2022 ஆம் ஆண்டு வரை அவர்களுக்கு இடையே எந்த தொடர்பும் இல்லை. அந்த ஆண்டு, ஒரு முன்னாள் வகுப்பு தோழர் பழைய மழலையர் பள்ளி நாடக வீடியோவை சமூக ஊடகங்களில் பகிர்ந்தார்.
இது பழைய நினைவுகளை மீட்டெழுப்பியதுடன் ஜெங்கின் தாய், அந்த வீடியோவைப் பார்த்ததும், தனது மகனுடன் மனைவியாக நடித்த பெண்ணை உடனடியாக அடையாளம் கண்டுகொண்டார்.
அவர்களுக்கு இடையே காதல் மலர வாய்ப்பு இருப்பதை உணர்ந்த அவர், ஜெங்கை தனது குழந்தைப் பருவ காதலியுடன் மீண்டும் இணைக்குமாறு ஊக்கப்படுத்தினார்.
அவர்களது முன்னாள் மழலையர் பள்ளி ஆசிரியரின் உதவியுடன், ஜெங் அவரைத் தேடும் முயற்சியில் ஈடுபட்டார்.
நீண்ட தேடலுக்குப் பிறகு, அவரை மீண்டும் சந்தித்து மகிழ்ச்சியடைந்தார் மற்றும் அவர் தனியாக இருப்பதையும் கண்டுபிடித்தார்.
அவர்களது தற்செயலான சந்திப்பு அழகான காதலாக மலர்ந்தது, இறுதியில் அவர்கள் சமீபத்தில் திருமணம் செய்து கொண்டனர்.
இந்த திடீர் திருப்பங்களுக்காக அவர்கள் நன்றியை தெரிவித்துள்ளனர். நீண்ட நாட்களுக்கு பிறகு இந்த சம்பவம் இணையத்தில் வைரலாகி உள்ளது குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |