எதிர்பார்த்தது போலவே காஸாவில் பதிவாகும் பட்டினிச்சாவுகள்: வெளிவரும் அதிர்ச்சி தகவல்
கடந்த இரண்டு நாட்களில் மட்டும் காஸாவில் பட்டினியால் 29 சிறார்கள் மற்றும் முதியவர்கள் இறந்துள்ளதாக பாலஸ்தீன ஆணைய சுகாதார அமைச்சர் தெரிவித்துள்ளார்.
ஊட்டச்சத்து குறைபாடு
காஸா முழுவதும் புதிதாக இஸ்ரேல் தொடங்கியுள்ள இராணுவத் தாக்குதல்களுக்கு மத்தியில், அதிகாலை முதல் குறைந்தது 52 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.
கிட்டத்தட்ட மூன்று மாதங்களுக்குப் பிறகு இஸ்ரேல் உணவுப் பொருட்களை அனுமதிக்கத் தொடங்கியதைத் தொடர்ந்து, இந்த வாரம் காஸாவில் உள்ள பாலஸ்தீன மக்களுக்கு உணவு உதவி சென்றடையத் தொடங்கும் என எதிர்பார்க்கப்படும் நிலையில் இந்த அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
இந்த நிலையில், வியாழக்கிழமை 90 லொறிகளில் மருந்து, கோதுமை மாவு மற்றும் ஊட்டச்சத்து பொருட்கள் காஸாவிற்குள் நுழைந்ததாக OCHA செய்தித்தொடர்பாளர் Jens Laerke உறுதி செய்துள்ளார்.
மேலும் இஸ்ரேல் அதிகாரிகளின் கடும் போக்கால், வான்வழி உதவிகளை விநியோகம் செய்வதிலும் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளார். இதனிடையே, காஸாவில் ஊட்டச்சத்து குறைபாடு பரவி வருவதாக, கடும் நெருக்கடியில் சிக்கியுள்ள பாலஸ்தீன பிரதேசத்தில் உள்ள மருத்துவர்கள் மற்றும் உதவிப் பணியாளர்கள் பல மாதங்களாக எச்சரித்து வருகின்றனர்.
மேலும், எதிர்பார்த்தது போலவே காஸாவில் தற்போது பட்டிச்சாவுகள் பதிவாகத் தொடங்கியுள்ளது என்றார் மேற்குக் கரையை தளமாகக் கொண்ட பாலஸ்தீன ஆணைய சுகாதார அமைச்சர் மஜீத் அபு ரமலான்.
சிறார்கள் உட்பட 29 பேர்கள் இதுவரை பட்டினியால் மரணமடைந்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். 1967 முதல் இஸ்ரேலால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள மேற்குக் கரையின் மீது பாலஸ்தீன ஆணையம் பகுதி கட்டுப்பாட்டைக் கொண்டுள்ளது.
அரை மில்லியன் மக்கள்
ஆனால் 2007 முதல் காஸா பகுதியை ஹமாஸ் நிர்வாகம் ஆட்சி செய்து வருகிறது. இந்த மாத தொடக்கத்தில், ஐந்து வயதுக்குட்பட்ட கிட்டத்தட்ட 71,000 குழந்தைகள் கடுமையான ஊட்டச்சத்து குறைபாட்டால் பாதிக்கப்படுவார்கள் என்று மதிப்பிடப்பட்டது. அதில் அடுத்த 11 மாதங்களில் 14,100 சிறார்கள் ஆபத்தான கட்டத்தை எட்டுவார்கள் என்றே அஞ்சப்படுகிறது.எதிர்பார்க்கப்படுகிறது.
மார்ச் மாதத்தில் இருந்தே காஸா மக்களுக்கான அனைத்து வகையான விநியோகங்களையும் இஸ்ரேல் முடக்கியது. ஹமாஸ் படைகள் தங்களது போராளிகளுக்கால உணவு விநியோகங்களை பறிமுதல் செய்வதாகக் கூறியது. இந்த குற்றச்சாட்டை ஹமாஸ் மறுத்துள்ளது.
இந்த மாத தொடக்கத்தில், காஸா பகுதியில் அரை மில்லியன் மக்கள் பட்டினியை எதிர்கொள்வதாக உலகளாவிய பசி கண்காணிப்பு நிறுவனம் தெரிவித்துள்ளது. Unicef வெளியிட்டுள்ள தகவலில்,
இந்த ஆண்டு காஸாவில் 9,000க்கும் மேற்பட்ட குழந்தைகள் ஊட்டச்சத்து குறைபாட்டிற்காக சிகிச்சை பெற்றுள்ளனர் என்றும், வரும் ஆண்டில் பல்லாயிரக்கணக்கான சிறார்கள் இந்த இக்கட்டான நிலைக்கு தள்ளப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுவதாக உணவுப் பாதுகாப்பு நிபுணர்கள் கூறுகின்றனர்.
இஸ்ரேல் தனது இராணுவ நடவடிக்கையை நிறுத்தி, முற்றுகையை முழுமையாக நீக்காவிட்டால், காஸா பகுதி பஞ்சத்தில் மூழ்கும் என்று நிபுணர்கள் எச்சரிக்கின்றனர். ஆனால் உலக சுகாதார நிறுவனம் கடந்த வாரம் தெரிவிக்கையில், மக்கள் ஏற்கனவே பட்டினியால் வாடத் தொடங்கியுள்ளதாகக் கூறியது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |