WHO அமைப்பின் நடுங்கவைக்கும் திட்டம்... சீனா, ரஷ்யாவால் மதிப்பிழக்கும் டொலர்: வாழும் நாஸ்ட்ராடாமஸ் கணிப்பு
உலக சுகாதார அமைப்பான WHO நடுங்கவைக்கும் திட்டம் ஒன்றை ரகசியமாக செயல்படுத்தி வருவதாக வாழும் நாஸ்ட்ராடாமஸ் எச்சரித்துள்ளார்.
சொந்த சர்வதேச நாணயம்
பிரேசில் நாட்டவரான வாழும் நாஸ்ட்ராடாமஸ், பிரித்தானிய ராணியாரின் மறைவு, கோவிட் பெருந்தொற்று தொடங்கி கத்தார் கால்பந்து உலக கிண்ணப் போட்டியில் யார் கிண்ணம் வெல்வார் என்பதையும் கணித்தவர்.
அவர் தற்போது அமெரிக்காவின் CIA உட்பட, உலகின் மிக முக்கியமான நாடுகளின் உளவு அமைப்புகள் மற்றும் டாவோஸின் உயர்மட்ட நபர்களால் உருவாக்கவிருக்கும் Athena Protocol தொடர்பில் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இந்த நெறிமுறையானது, தங்கம், கார்பன் மற்றும் அரிய மண் தாதுக்களால் மதிப்பிடப்படும் அதன் சொந்த சர்வதேச நாணயத்தால் டொலரை மதிப்பிழக்கச் செய்யும் ஒரு தனி நிதி அமைப்பை உருவாக்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது என்றே வாழும் நாஸ்ட்ராடாமஸ் கணித்துள்ளார்.
Athena Protocol ஒரு புதிய நிதி அமைப்பை உருவாக்க முயற்சி முன்னெடுத்து வருவதாகவும், இதற்கு சிங்கப்பூர், ஐக்கிய அரபு அமீரகம், சீனா, ரஷ்யா, பிரேசில் மற்றும் சுவிட்சர்லாந்தில் உள்ள வங்கிகள் ஆதரவளித்து வருவதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
மேற்கத்திய நாடுகளின் நிதி அமைப்புகளை உலுக்கும் இந்த புதிய அமைப்பு, அடுத்த சில ஆண்டுகளுக்குள் அமெரிக்க டொலரின் மதிப்பை இழக்க வைக்கும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
Athena Protocol மட்டுமின்றி, உலக சுகாதார அமைப்பான WHO அதன் சொந்த ரகசிய திட்டத்திலும் ஈடுபட்டுள்ளது என்றும் இது திகிலூட்டும் விளைவுகளை ஏற்படுத்தக்கூடியது எனவும் வாழும் நாஸ்ட்ராடாமஸ் எச்சரித்துள்ளார்.
ஒரு பேரழிவு தரும் நிகழ்வு
குறிப்பிட்ட சில WHO அதிகாரிகளால் முன்னெடுக்கப்படும் அந்த ரகசிய திட்டத்திற்கு இதுவரை உத்தியோகப்பூர்வமான பெயர் சூட்டப்படவில்லை என்றும் அவர் பதிவு செய்துள்ளார்.
சிரியா மற்றும் சூடானில் உள்ள அகதிகள் முகாம்களில் வசிக்கும் அப்பாவி மக்களின் உணர்ச்சிபூர்வமான நடத்தைகளை பதிவு செய்து அவர்களின் உணர்ச்சிகளுக்கு ஏற்ற பயோமெட்ரிக் ஐடிகளை செயல்படுத்துவதற்கும் செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்துவதற்கான சோதனை முயற்சிகளை WHO முன்னெடுத்து வருகிறது.
இந்த ரகசிய திட்டத்தை அவர்கள் நியாயப்படுத்தவும் செய்துள்ளனர். அதாவது மிக மோசமான சூழலில் முகாம்களில் வசிக்கும் மக்களில் வன்முறை மற்றும் பெருந்திரள் தற்கொலைகளைத் தடுக்கவே இந்த திட்டம் என்றும் விளக்கமளிக்கப்பட்டுள்ளது.
உண்மையில், அப்பாவி மக்களின் மூளையை நுண்ணறிவு கருவிகளால் கட்டுப்படுத்தும் சோதனை முயற்சி என்றே வாழும் நாஸ்ட்ராடாமஸ் எச்சரித்துள்ளார்.

உக்ரைன் உடைந்து சின்னாபின்னமாகும்... இந்த இரண்டு நாடுகளும் உலகை ஆளும்: எச்சரிக்கும் வாழும் நோஸ்ட்ராடாமஸ்
மட்டுமின்றி, இந்த ஆண்டு முடிவடையும் போது, அதாவது ஆகஸ்ட் மற்றும் செப்டம்பர் மாதங்களில் கரீபியன் மற்றும் வடக்கு அட்லாண்டிக்கில் சூறாவளிகளால் முதலில் குறிக்கப்படும் ஒரு பேரழிவு தரும் உலகளாவிய நிகழ்வு ஏற்படும் என்றும் வாழும் நாஸ்ட்ராடாமஸ் கணித்துள்ளார்.
2026 ஆம் ஆண்டு பிறக்கும்போது, மேற்கு ஐரோப்பாவில் கோடையில் கடுமையான வறட்சி ஏற்படும், அதைத் தொடர்ந்து இலையுதிர்காலத்தில் பருவகாலமற்ற வெப்பமண்டல புயல்கள் மற்றும் பல தசாப்தங்களில் இல்லாத மிகக் கடுமையான குளிர்காலம் ஏற்படும் என்றும் எச்சரித்துள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |