ஜப்பானுக்கு புதிய அச்சுறுத்தல்... நாட்டு மக்களுக்கு சீனா விடுத்த அறிவுறுத்தல்
தைவான் விவகாரத்தில் ஜப்பானின் புதிய பிரதமரின் கருத்தை அடுத்து, அந்த நாட்டிற்கு எவரும் பயணப்பட வேண்டாம் என தனது குடிமக்களுக்கு சீனா அறிவுறுத்தியுள்ளது.
குடிமக்களுக்கு எச்சரிக்கை
ஜப்பானின் புதிய பிரதமராக பொறுப்பேற்றுள்ள சனே தகைச்சி, கடந்த 7ம் திகதி நடாளுமன்றத்தில் ஆற்றிய உரையில், தைவான் மீது சீனா இராணுவத்தைப் பயன்படுத்தும் என்றால், தற்காப்புக்கு என ஜப்பானும் இராணுவத்தைக் களமிறக்க நேரிடும் என்றார்.

தைவானில் இருந்து வெறும் 100 கி.மீ தொலைவில் அமைந்துள்ள ஜப்பான், பிரதமரின் கருத்தில் உறுதியாக உள்ளது. இந்த நிலையில், ஜப்பானில் உள்ள சீனத் தூதரகம், அந்நாட்டிற்கு பயணம் செய்வதைத் தவிர்க்குமாறு தனது குடிமக்களை எச்சரித்தது.
சமீபத்தில், ஜப்பானிய தலைவர்கள் தைவான் தொடர்பாக வெளிப்படையாக ஆத்திரமூட்டும் கருத்துக்களை வெளியிட்டுள்ளனர். இது மக்களிடையேயான பரிமாற்றங்களுக்கான சூழலை கடுமையாக சேதப்படுத்துகிறது என்றும்,
பாதுகாப்பு மற்றும் உயிருக்கு
ஜப்பானில் உள்ள சீன குடிமக்களின் தனிப்பட்ட பாதுகாப்பு மற்றும் உயிருக்கு குறிப்பிடத்தக்க ஆபத்து ஏற்படலாம் என்றும் சீனத் தூதரகம் எச்சரித்துள்ளது.

மேலும், வெளிவிவகார அமைச்சகமும், ஜப்பானில் உள்ள சீன தூதரகமும், துணைத் தூதரகங்களும், சீனக் குடிமக்கள் விரைவில் ஜப்பானுக்குப் பயணம் செய்வதைத் தவிர்க்குமாறு நினைவூட்டியுள்ளனர்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |