மாட்டிறைச்சி, காபி மற்றும் பிற உணவுகள் மீதான வரிகளை அதிரடியாக குறைத்த ட்ரம்ப்
அமெரிக்காவில் பணவீக்கம் குறித்த கவலைகள் அதிகரித்து வரும் நிலையில், மாட்டிறைச்சி, காபி மற்றும் பிற உணவுகள் மீதான வரிகளை ஜனாதிபதி ட்ரம்ப் குறைத்துள்ளார்.
அதிரடி நடவடிக்கை
ட்ரம்பின் இந்த வரி குறைப்பில் 200க்கும் மேற்பட்ட உனவுப் பொருட்கள் உட்படுத்தப்பட்டுள்ளது. காபி, மாட்டிறைச்சி, வாழைப்பழங்கள் மற்றும் ஆரஞ்சு சாறு போன்ற முக்கிய உணவுகளுக்கு வரி குறைப்பு செய்யப்பட்டுள்ளது.

மளிகைப் பொருட்களின் விலை உயர்வு குறித்து அமெரிக்க நுகர்வோர் மத்தியில் அதிகரித்து வரும் பதட்டம் காரணமாகவே ட்ரம்ப் இந்த அதிரடி நடவடிக்கையை முன்னெடுத்துள்ளதாக கூறுகின்றனர்.
வியாழக்கிழமை நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் இந்த வரி குறைப்பு, உண்மை நிலவரத்தை ட்ரம்ப் புரிந்துகொண்டுள்ளார் என்பதை குறிப்பிடுவதாக நிபுணர்கள் தரப்பு கூறுகின்றனர்.
வரி விதிப்பால் நாட்டில் பணவீக்கம் ஏற்படவில்லை என ட்ரம்ப் இதுவரை உறுதிபட தெரிவித்து வந்துள்ளார். பொதுவாக அமெரிக்காவில் பணவீக்கம் இல்லை என்றே ட்ரம்ப் மீண்டும் குறிப்பிட்டுள்ளார்.
ஆனால், வர்ஜீனியா, நியூ ஜெர்சி மற்றும் நியூயார்க் நகரங்களில் மாகாணம் மற்றும் உள்ளூர் தேர்தல்களில் ஜனநாயகக் கட்சியினர் தொடர்ச்சியான வெற்றிகளைப் பெற்றுள்ள நிலையிலேயே ட்ரம்பின் இந்த வரி குறைப்பு வெளியாகியுள்ளது.
தேர்தல் நடந்த பகுதிகளில் விலைவாசி உயர்வு உள்ளிட்டவை முதன்மையான பேசு பொருளாகவே இருந்துள்ளது. இதனிடையே, வரி வருவாயில் இருந்து குறைந்த மற்றும் நடுத்தர வருமான அமெரிக்கர்களுக்கு 2,000 டொலர் கொடுப்பனவை வழங்கும் திட்டத்தை அடுத்த ஆண்டு அமுலுக்கு கொண்டுவர இருப்பதாக ட்ரம்ப் மீண்டும் தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில் கட்டமைப்பு வர்த்தக ஒப்பந்தங்களை அறிவித்த ட்ரம்ப் நிர்வாகம், அவை இறுதி செய்யப்பட்டால் அர்ஜென்டினா, ஈக்வடார், குவாத்தமாலா மற்றும் எல் சால்வடார் ஆகிய நாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்படும் சில உணவுப் பொருட்கள் மற்றும் பிற பொருட்களுக்கான வரிகளை நீக்க முடிவு செய்துள்ளது.
தலைகீழாக
வெள்ளிக்கிழமை வெளியிடப்பட்ட வரி குறைப்பு பட்டியலில், அமெரிக்க நுகர்வோர் தங்கள் குடும்பங்களுக்கு வீட்டிலேயே உணவளிக்க வழக்கமாக வாங்கும் தயாரிப்புகளும் அடங்கும்.
ஆரஞ்சு பழங்கள், அகாய் பெர்ரி மற்றும் பாப்ரிகா முதல் கோகோ வரை 200 க்கும் மேற்பட்ட பொருட்கள், உணவு உற்பத்தியில் பயன்படுத்தப்படும் ரசாயனங்கள், உரங்கள் மற்றும் கம்யூனியன் வேஃபர்கள் உட்பட வரி குறைக்கப்பட்டுள்ளது.

செப்டம்பர் மாதத்திற்கான சமீபத்திய தரவுகளின்படி, அரைத்த மாட்டிறைச்சி கிட்டத்தட்ட 13 சதவீதம் விலை உயர்ந்துள்ளது, ஸ்டீக்ஸின் விலை ஒரு வருடத்திற்கு முன்பு இருந்ததை விட கிட்டத்தட்ட 17 சதவீதம் அதிகமாகும்.
அமெரிக்கா ஒரு பெரிய மாட்டிறைச்சி உற்பத்தியாளராக இருந்தாலும், சமீபத்திய ஆண்டுகளில் கால்நடைகளின் தொடர்ச்சியான பற்றாக்குறை மாட்டிறைச்சி விலைகளை அதிகமாக வைத்திருக்கிறது.
ஒவ்வொரு நாட்டிலிருந்தும் இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு 10 சதவீத அடிப்படை வரியையும், நாட்டிற்கு நாடு மாறுபடும் கூடுதல் குறிப்பிட்ட வரிகளையும் விதித்து, ட்ரம்ப் உலகளாவிய வர்த்தக அமைப்பையே தலைகீழாக மாற்றியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |