இரண்டாவது தடுப்பூசியை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு அங்கீகரித்த சீனா!
சினோவாக் பயோடெக்கின் கொரோனா தடுப்பூசி சீனாவில் பொது மக்களால் பயன்படுத்த முறையாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது.
சீனா கடந்த டிசம்பர் 31-ஆம் திகதி அரசுக்கு சொந்தமான Sinopharm கொரோனா தடுப்பூசியை பொதுமக்கள் பயன்பாட்டுக்கு அங்கீகரித்தது.
அதனைத் தொடர்ந்து, இன்று இரண்டாவதாக தனியார் நிறுவனமான Sinovac Biotech-ன் கொரோனா தடுப்பூசியை பொதுமக்களின் பயன்பாட்டுக்கு CFDA அதிகாரப்பூர்வ அங்கீகாரம் அளித்துள்ளது.
Sinopharm மற்றும் Sinovac ஆகிய இரண்டு மருந்துகளுமே, சீன அரசாங்கத்தால் அதன் தடுப்பூசி திட்டத்தில் பயன்படுத்தப்பட்டது. அவை சீனாவில் அதிக ஆபத்துடைய முன்னுரிமை குழுக்களுக்கு வழங்கப்பட்டது.
சினோவாக் தடுப்பூசியை இந்தோனேசியா, பிரேசில், துருக்கி, கொலம்பியா, சிலி, லாவோஸ் ஆகிய நாடுகள் அவசரகால தடுப்பூசியாக அங்கீகரித்துள்ளன.
அந்நாடுகளில் மூன்றாம் கட்ட மருத்துவ பரிசோதனைகளில் சினோவாக்கின் தடுப்பூசி பரிசோதிக்கப்படுகிறது, அங்கு மாறுபட்ட செயல்திறன் அளவீடுகள் தனித்தனியாக வெளியிடப்பட்டன.
அதனைத் தொடர்ந்து சீனாவில் பொதுமக்கள் பயன்பாட்டுக்கு அங்கீகரிக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
