உலகின் முதல் பயணிகள் விமான டாக்ஸி., சீன அரசு ஒப்புதல்
சீனாவில் விரையில் இரண்டு பேர் பயணிக்கக் கூடிய ஏர் டாக்ஸி பொது பயன்பாட்டிற்கு வரவுள்ளது.
சீனாவில் உலகின் முதல் பயணிகள் விமான டாக்ஸிக்கு சீன அரசு ஒப்புதல் அளித்துள்ளது. இரண்டு பேர் பயணிக்கக் கூடிய இந்த ஏர் டாக்ஸி சீன அரசிடமிருந்து பாதுகாப்பு தரச் சான்றிதழைப் பெற்றுள்ளது.
EH216-S AAV எனும் இந்த இந்த ஏர் டாக்ஸியை எஹாங் (Ehang) என்ற சீன நிறுவனம் தயாரித்துள்ளது. விரைவில் ஏர் டாக்ஸி சேவையை தொடங்க முயற்சித்து வருவதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
அடுத்த ஐந்து ஆண்டுகளில், உலகின் பல இடங்களில் ஏர் டாக்சிகள் தோன்றும் என்று நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி ஹுவாஜி ஹு (Huazhi Hu ) கூறினார். தங்கள் நிறுவனம் ஏற்கனவே 1200 ஆர்டர்களைப் பெற்றுள்ளதாக அவர்கள் தெரிவித்தனர்.
விரைவில் அமெரிக்கா, ஐரோப்பா மற்றும் தென்கிழக்கு ஆசியாவில் இதே போன்ற சான்றிதழ்களுக்கு வழி வகுக்கும் என்றும் கூறினார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |
EHang, eVTOL, two-passenger multicopter aircraft, China approves world’s first passenger-carrying flying taxi