அமெரிக்காவிற்கு எதிராக இந்தியாவை ஆதரிக்கும் சீனா
அமெரிக்கா விதித்துள்ள கடுமையான வரிக்கு மத்தியில், இந்தியாவிற்கு சீனா ஆதரவை தெரிவித்துள்ளது.
அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு ட்ரம்ப் இந்தியாகிவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு 50 சதவீதம் வரி விதித்துள்ளார். இதற்கு எதிராக, சீனா இந்தியாவிற்கு ஆதரவளிக்க முன்வந்துள்ளது.
சீனா தூதுவர் சு ஃபெய்ஹோங் (Xu Feihong), அமெரிக்காவின் இந்த நடவடிக்கையை 'துன்புறுத்தும் செயல்' என விமர்சித்துள்ளார்.
மேலும், உலக பன்முக வர்த்தக முறையை பாதுகாக்க சீனா இந்தியாவுடன் உறுதியாக நிற்கும் என கூறியுள்ளார்.
இந்திய பிரதமர் நரேந்திர மோடி மற்றும் சீன ஜனாதிபதி ஜி ஜின்பிங் இடையே உறவுகள் மேம்படுத்த தொடங்கியுள்ள நிலையில், சீன வெளிவிவகார அமைச்சர் வாங் யி (Wang Yi) இந்திய வெளிவிவகார அமைச்சர் ஜெய்சங்கருடன் சந்தித்து பேசியுள்ளார். இரு நாடுகளும் தங்கள் ஒத்துழைப்பை விரிவிவுபடுத்த திட்டமிட்டுள்ளன.
ரஷ்யாவிலிருந்து கச்சா எண்ணெய் வாங்கியதற்காக இந்தியா மீது கூடுதலாக 25 சதவீத வரி விதிப்பதாக ட்ரம்ப் அறிவித்தார். இதற்கும் சீனா எதிர்ப்பு தெரிவித்திருந்தது.
இந்தியா-சீனா இடையிலான உறவுகள் கடந்த சில ஆண்டுகளாக பதற்றமடைந்தாலும், தற்போது இரு நாடுகளும் உறவுகளை சீரமைக்க முயற்சி மேற்கொண்டு வருகின்றன.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |
Trump India tariff, China supports India, US trade war Asia, Xu Feihong Trump, Modi Xi Jinping SCO, India China relations, WTO multilateral trade, Trump Russian oil tariff