சீனாவில் பெண் உள்ளாடைகள் அணிந்து மாடலிங் செய்யும் ஆண்கள்! ஏன் தெரியுமா?
சீனாவில் பெண் உள்ளாடைகளுக்கு ஆண்கள் மாடலிங் செய்து வருகின்றனர்.
சீனாவின் தடை
பெண் மாடல்கள் உள்ளாடைகளை ஆன்லைனில் காட்சிப்படுத்த சீனா தடை விதித்துள்ளது. இந்தக் கட்டுப்பாட்டைத் தவிர்க்க, சீன லைவ்ஸ்ட்ரீம் ஃபேஷன் நிறுவனங்கள் பெண் உள்ளாடைகளை சந்தைப்படுத்த தங்கள் வீடியோக்களில் ஆண் மாடல்களைக் காட்டத் தொடங்கியுள்ளன.
நியூயார்க் போஸ்ட்டின் கூற்றுப்படி, ஆபாசமான விஷயங்களை ஆன்லைனில் பரப்புவதற்கு எதிரான சட்டத்தின்படி, உள்ளாடைகளுக்கு மாடலிங் செய்யும் பெண்கள் இடம்பெறும் நேரடி ஒளிபரப்புகளை சீன அதிகாரிகள் தடை செய்துள்ளனர்.
Douyin
பெண் உள்ளாடைகளுக்கு ஆண்கள் மாடலிங்
எனவே, இந்த நிறுவனங்களில் சில பெண்களின் உள்ளாடைகளைக் காட்ட ஆண் மாடல்களை வேலைக்கு அமர்த்துகின்றன. அவர்களின் வீடியோக்கள் சீனாவின் TikTok பதிப்பான Douyin-ல் வைரலானது.
Douyin
"The light and luxurious boudoir of the wife and adults" என்ற தலைப்பில் இந்த ஆண் மாடல்கள் லைவ் ஸ்ட்ரீம் வீடியோ வெளியானது. இந்த நேரடி ஸ்ட்ரீம்களின் பல இயக்குநர்கள் பெண்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
ஆனால், இந்த முறையை இன்னும் எவ்வளவு காலம் தொடர்ந்து செயல்படுத்த முடியும் என்பது தெரியவில்லை. ஏனெனில் சீனா ஆண்களின் "பெண்மைத்தனமான" சித்தரிப்புகளையும் ஊடகங்களில் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுத்துவருவதாக கூறப்படுகிறது.